Friday, November 24, 2017

நீ வேறு . . நான் வேரு . . .

தீக்கதிர் ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் கவிதையை பகிர்ந்து கொள்கிறேன்.

பிரிவினையைத் தூண்டி, ஆபாசத்தை உமிழ்கிற சங் பரிவாரக் கும்பலைச் சேர்ந்த அனைவருக்கும் செங்கொடி இயக்கம் தருகிற சவுக்கடி இக்கவிதை.  


 
நீ வேறு; நான் வேறு

வெறியூட்டி வளர்க்கப்பட்ட வன் நீ
அறிவூட்டி வளர்க்கப்பட்டவன் நான். 


தலையில் பிறந்ததாய்
சொல்லும் தறுதலை நீ
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
எனக்கு


செத்த மொழியில் நெளியும் புழு நீ
என்றுமுள உயிர்த்
தமிழில் துளிர்த்தவன் நான். 


நீ வர்ணம்
நான் வர்க்கம் .


நீ விஷம்
நான் விதை


வன்மம் உன் காடு
அன்பு என் அறன்.


அறுத்த துரோணன் நீ
வெட்டுப்பட்ட ஏகலைவன் நான்.


தீ மூட்டியவன் நீ
எரிந்து போன நந்தனின் குருத்தெழும்பு நான் 


மனுவின் எழுதுகோல் நீ
மார்க்சின் மைக்கூடு நான்.


உன் கொடி பிரிக்கும்
என் கொடி இணைக்கும் .


நீ வேறு. நான் வேரு

No comments:

Post a Comment