Tuesday, November 28, 2017

ரத்தை ரத்து செய்யாதது சட்டபூர்வமானதுதானா?



மேஜரான ஒரு பெண் தன் விருப்பப்படி யாரையும் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமை உள்ளதாக இந்தியச் சட்டம் சொல்கிறது.

மாற்று மதத்தைச் சார்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வதற்கு வசதியாக இந்திய திருமணச் சிறப்புச் சட்டம் 1954 என்ற ஒரு சட்டமும் இருக்கிறது. 

அப்படி சட்டப்படியாக நடைபெற்ற ஒரு திருமணத்தை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை எனும் போது 

அதை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லும் உரிமை
தேசிய புலனாய்வு ஏஜென்ஸி (NIA) க்கு எங்கிருந்து வந்தது?

அதன்படி ஒரு திருமணத்தை ரத்து செய்வது என்பது கேரள உயர்நீதி மன்ற நீதிமன்றத்தின் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டதுதானா?

தான் தன் கணவனோடுதான் வாழ விரும்புகிறேன் என்று ஒரு பெண் மிகவும் தெளிவாக சொன்ன பின்பும் திருமணத்தை ரத்து செய்த ஆணையை ரத்து செய்வது பற்றி ஏன் நீதியரசர்கள் மௌனமாக உள்ளார்கள்?

இந்திய அரசியல் சாசனத்தை விட
சட்டங்களையெல்லாம் விட

தேசிய புலனாய்வு ஏஜென்ஸி கிளப்பி விடுகிற 
ஒரு வதந்திக்கு

சக்தி அதிகமா?

நீதிமன்றங்களைக் கூட கட்டுப்படுத்தும் வலிமை கூட அதற்கு உண்டா?

இன்றைக்கு ஹாதியா.
நாளை ????????????????


 

1 comment:

  1. மேயரான பெண்ணின் திருமண வாழ்வில் நீதிமன்று தலையிட முடியாதது
    ஆனால் எனக்கு இதுவரை புரியாத ஒன்று
    இந்தியா முழுவதும் பல பெண்கள் மதம் மாறி திருமணம் செய்கின்றனர் .. ஆனால் எந்த சிக்கலும் வரவில்லை ... நீதி மன்றமும் தலையிட வில்லை .. ஆனால் இந்த பிரச்சினையில் மட்டும் ஏன் இவ்வளவு கடுமையாக உள்ளது .
    தேசிய புலனாய்வு ஏஜென்ஸி ஏன் இந்த திருமணத்தை மட்டும் கடுமையாக இருக்கின்றது ... பெண்ணின் அப்பன் இந்து மட்டுமே ... பணக்காரனோ அரசியல் வாதியோ கிடையாது ..
    .
    .
    இன்னொரு உறுத்தல்
    .
    இந்த பெண்ணின் உரிமைக்காக இந்துக்கள் பெரும்பானமையானோர் போராடுகின்றார்கள் .. ஆனால் இதே போல் இஸ்லாமில் இந்து மதத்துக்கு வந்த பெண்ணுக்காக இஸ்லாமியர் குரல் கொடுப்பார்களா ?
    ( மேல் வசனம் ஒரு மிதவாத இஸ்லாமியர் யுவகிரிஷ்ணாவின் பதிவில் இடட கமெண்ட் )

    ReplyDelete