Sunday, November 5, 2017

பாரி வேந்தன் ஆகாதீர்



கடந்த செப்டம்பர் மாதத்தின் இறுதியில் சேலத்திற்கு காரில் ஒரு இரவுப்பயணம் செல்ல வேண்டியிருந்தது. நள்ளிரவிலேயே திரும்பி வந்தோம். கிருஷ்ணகிரியில் பைபாஸ் சாலையில் தேநீர் குடிக்க நிறுத்தியபோது பக்கத்தில் செடிகளுக்கு மத்தியில் வெள்ளையாக ஏதோ தெரிந்தது.

ஒரு ஆர்வத்தில் அருகே சென்றால் அந்த வெள்ளைப் பொருள் சுத்தமாக நொறுங்கிய ஒரு கார்.

படத்தைப் பாருங்கள்.

 
எவ்வளவு வேகமாக வந்திருந்தால் இவ்வளவு மோசமாக உருக்குலைந்து போயிருக்கும்?

முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்த பாரி வேந்தன் போல செடிகள் படருவதற்கு  இந்த கார் என்றுதான் அதைப் பார்க்கையில் தோன்றியது.

உயிரைக் குடிக்கும் அதி வேகம் தேவையா?

மித வேகத்தில் போனால் குடியா முழுகி விடும்?

வேகம் தவிர்ப்பீர்,

பாரி வேந்தன் ஆகாதீர். உங்களது குடும்பத்தினரை பரிதவிக்க வைக்காதீர்.

பின் குறிப்பு : இதை எழுதும் போதே இன்னொரு சந்தேகம் வந்தது. அது பிறகு.

1 comment:

  1. இவ்வாறான விபத்துகளை பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. நிதானம் தவறும்போது நிகழ்பவையே இவை.

    ReplyDelete