கடந்த மாதம் ஆரணியில் நடைபெற்ற எங்கள் கோட்டச்சங்கத்தின் முப்பதாவது பொது மாநாட்டிற்காக ஆரணி நகரத்தில் எட்டு பேனர்கள் வைத்திருந்தோம். முறையாக அனுமதி வாங்கி, நகராட்சிக்கு கட்டணம் செலுத்தி அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கு மட்டுமே வைத்திருந்தோம்.
ஆரணி நகரத்து மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய விதத்தில் பேனர்களின் வடிவமைப்பும் சொல்லப்பட்ட செய்தியும் அமைந்திருந்தது மனதிற்கு நிறைவளித்தது.
மாநாட்டின் பின்னணியில் அமைந்திருந்த பேனர் நன்றாக வந்திருந்தாலும் பார்க்கும் போதெல்லாம் துயரத்தை அளித்துக் கொண்டே இருந்தது.
மூன்று முக்கியமான தோழர்களை கடந்த ஆண்டில் இழந்துள்ளோம் என்ற வேதனையை அந்த பின்னணி அளித்துக் கொண்டே இருந்தது.
No comments:
Post a Comment