Monday, August 28, 2017

மொட்டைக் கடிதத்தினால் ஒளிந்து கொண்டவர்



முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரன், வேலூர் முன்னாள் மேயர் பா.கார்த்தியாயணி உள்ளிட்ட சிலர் பாஜகவில் இணைந்தார்கள் என்று ஒரு செய்தியைப் பார்த்ததும் நினைவுக்கு வந்த சம்பவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஐந்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் வேலூர் கோட்டச் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு மாநாட்டிற்காக ஒரு வரவேற்புக்குழு அமைத்திருந்தோம்.

அப்போதுதான் வேலூர் நகரத்தின் மேயராக திருமதி கார்த்தியாயணி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.  வரவேற்புக்குழுத் தலைவராக நகரின் முதல் பெண்மணி இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதினோம். வேறு சில கோட்டங்களில் மேயர்கள் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்திருக்கிறார்கள் என்பதையும் மனதில் கொண்டு அவரோடு பேசினோம்.

அவரும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார். எல்.ஐ.சி ஊழியர்கள் மத்தியில் வருவது தனக்கு ஒரு அங்கீகாரம் என்றும் பெருமையாகச் சொன்னார்.  வழக்கமாக வரவேற்புரையை மாநாட்டில் அச்சிட்டுக் கொடுப்போம். அச்சிடுவதற்கு முன்பு தயார் செய்து கொண்டு வந்து அவரிடம் காண்பிக்கிறோம் என்றோம்.

மாநாட்டிற்கு சில தினங்கள் முன்பு அழைப்பிதழோடு அவரைப் பார்க்கச் சென்ற போது அவரது அணுகுமுறையில் மிகுந்த மாற்றம் இருந்தது.

அவர் ஆற்ற வேண்டிய வரவேற்புரையைக் காண்பித்த போது அதிலே அவ்வளவு சுவாரஸ்யம்  அவரிடத்தில் இல்லை.  நான் உங்களுக்கு போன் செய்கிறேன். அதற்கு பிறகு அச்சிடுங்கள் என்றார். அப்போதே தெரிந்து விட்டது, இவர் மாநாட்டிற்கு வரப்போவதில்லை என்று.

அவரிடமிருந்து தொலைபேசியும் வரவில்லை. நாங்கள் அழைத்த போதும் எடுக்கவில்லை. அதற்காக கவலைப்படாமல் மாநாட்டுப் பணிகள் தொடர்ந்தது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.டி.சங்கரி வரவேற்புரை வழங்கினார். மாநாடு சிறப்பாகவே நடந்து முடிந்தது.

மேயருக்கு நெருக்கமானவர்கள் மூலமாக பிறகு விசாரித்த போதுதான் ஒரு உண்மை தெரிந்தது. “அது ஒரு கம்யூனிஸ்டு சங்கம். அந்த மாநாட்டில் கலந்து கொண்டால் உங்கள் மேயர் பதவியை அம்மா பறித்து விடுவார்” என்று அவரை மிரட்டி ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கிறது. அதைப் பார்த்ததும் இவர் பயந்து போய் மாநாட்டுக்கு வராமல் ஒதுங்கி விட்டார்.

அந்த மொட்டைக் கடிதத்தை அனுப்பிய நல்லவர் யார் என்பதை கண்டு பிடித்து விட்டோம் என்பது வேறு விஷயம்.சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று போய் விடும் என்பது போன்றதொரு நம்பிக்கை. பாவம் !!!!

அனைத்து அம்சங்களிலும் மிகச் சிறப்பான மாநாடு அது. கீழே உள்ள புகைப்படங்கள் அதை உணர்த்தும். அதில் கலந்து கொள்ளாததால் பாவம் மேயருக்குத்தான் இழப்பு. 








மொட்டைக்கடிதத்திற்கு பயந்து ஒப்புக்கொண்ட பொறுப்பிலிருந்து ஒளிந்து கொண்டவர் இப்போது பதவிக்காக பாஜக பக்கம் போயிருக்கிறார். ஒடுக்கப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த தனக்கு சரியான அங்கீகாரம் அதிமுகவில் இல்லை என்று புலம்பிக் கொண்டிருந்தவர் போய்ச் சேர்ந்துள்ள இடத்தில் அவருக்கு என்ன அங்கீகாரம் கிடைக்கப் போகிறதோ:?


9 comments:

  1. army of mercenaries controlled by china

    ReplyDelete
    Replies
    1. பதிவுக்கு சம்பந்தமே இல்லாம ஏம்பா உளருகிறாய்?
      இவ்வளவு மக்கள் திரள் பார்த்ததும் டென்ஷனா இருக்கா?
      வயிறு எரிகிறதா?

      Delete
  2. mottha
    office-m
    ingathaan
    irukeenga
    pola....

    hmm...
    next
    jenmathula
    stalin puniayathula
    LIC-la join
    pannidonum..
    yepadiavadhu...


    appathaan
    mathavangilukku
    olichuu
    ooddaaa poida-laammm....

    ReplyDelete
    Replies
    1. வயிற்றெரிச்சல் நன்றாகவே புரிகிறது.
      ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று
      விடுப்பென்று வீட்டில்
      ஓய்வெடுக்காமல்
      சொந்த செலவில்
      திரண்ட தோழர்கள்.

      உன்னைப் போன்ற
      உண்டு கொழுத்த
      பேர்வழிகளுக்கு
      எல்.ஐ.சி யின் நிழலில்
      நிற்கக் கூட
      அருகதை கிடையாது.

      மு.க.ஸ்டாலின் மூலமாக
      எல்லாம் இங்கே
      வேலை கிடைக்காது தம்பி.

      அடுத்த ஜென்மத்தில்
      முயற்சி செய்வதற்கு
      முன்பாக இந்த ஜென்மத்தில்
      மனிதனாக இருக்க
      முயற்சி செய்

      Delete
  3. IS STALIN IS CHAIRMAN OF LIC? TO GIVE JOB IN LIC. ILLITERATE DMK FELLOWS

    ReplyDelete
    Replies
    1. hello literate....

      i am about russia stalin..

      both highly educated, shows your knowledge level...:)

      Delete
    2. படித்தவன் போல உன் முந்தைய பின்னூட்டமும் இல்லை,
      இப்போதைய பின்னூட்டமும் இல்லை.

      உனக்கு அறிவு இருக்கலாம்
      ஆனால் அதற்கான பண்பு கிடையாது.

      அதனால்தான் ஒளிந்து கொண்டு
      கோழையாய் அலைகிறாய்.

      Delete
    3. appo
      unga kitta
      panbu irukku
      aanaa.... illeynu
      solreengalaa sir.
      unga pola

      Govtjob & union
      shelterla
      irundha
      naanum
      photo pottu
      yeludhalaam...
      adudhaan
      illeye...

      Anonymous aaga
      pala kaaranam
      irukku...

      karutha paarunga..
      yeludharavaray
      personal attack
      pannadheenga...

      appdi pannaa
      neenga
      thanguveengalaa...

      so.yellorukkum vandha
      rathhtam thaan..
      no thakkalichutney!!

      Delete
    4. அனாமதேயமாக இருக்க
      ஆயிரம் காரணம் இருக்கலாம்.
      வக்கிரமாக எழுதவும்
      வன்மத்தை வெளிப்படுத்தவும்
      அனாமதேயம் என்ற
      முகமுடியை பயன்படுத்தும்
      உன்னைப் போன்றவர்களிடம்
      பண்பாக நடந்து கொள்ளவேண்டிய
      அவசியம் இல்லை.
      அதற்கான தகுதியும்
      உனக்குக் கிடையாது.
      நீ சொல்வது என்றும்
      கருத்து கிடையாது,
      வெறும் வக்கிரம்,
      வக்கிரம் மட்டுமே.
      இவ்வளவு சொல்லியும்
      நீ மறுபடியும்
      வக்கிரமாக வாந்தி
      எடுக்க வரத்தான் போகிறாய்.
      ஏனென்றால் நீ ஒரு போலி.
      உன் அடையாளம் வெளியே
      தெரிந்தால் அன்றோடு
      உன் பிம்பம் தகர்ந்து போய் விடும்.
      கொஞ்சமாவது நேர்மையாக வாழ
      முயற்சி செய்.
      உனக்கு அது கஷ்டம்தான்

      Delete