சற்று முன்
அனேகமாக நடமாட்டங்கள் எல்லாம் அடங்கி பகுதியே அமைதியாக இருந்தது. மும்முரமாக புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தேன்.
திடீரென பெரும் ஓசை. ஓவராய் விசில் சத்தம். அஜித்தின் படத்தைத்தான் தெருவில் போடுகிறார்களோ என்று சந்தேகப்பட வைக்கும் அளவிற்கு ஆரவாரம். நாய்களின் குரைப்பும் இணைந்து கொள்ள சில நிமிடங்கள் முன்பிருந்த அமைதி அப்படியே காணாமல் போயிருந்தது.
என்னவென்று தெரிந்து கொள்ள வாசலுக்கு வந்தால் எங்கள் வீட்டிற்கு ஒரு ஐம்பதடி தள்ளி போடப்பட்டிருந்த பந்தலில் வினாயகர் சிலையை இறக்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அங்கே இருந்த பத்து பதினைந்து இளைஞர்களும் டாஸ்மாக்கின் ஆக்கிரமிப்பில் இருந்தார்கள் என்பது தெளிவாகப் புரிந்தது.
இன்றே இப்படி என்றால்
சிலைகளை கரைக்கும் நாளன்று எப்படி இருக்கும்?
போதாக்குறைக்கு வீர(!)த்துறவியார் வேறு வரப் போகிறாராம்.
சாராய போதையை ஊட்டி மத போதையை வளர்க்கிறார்கள்.
கவலையாக இருக்கிறது.
தடம் புரண்டு செல்லும் இளைஞர்களின் எதிர்காலத்தை நினைத்து.
No comments:
Post a Comment