நேற்று
மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு போகையிலும்
இன்று
காலை வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு போகையிலும்
இன்று
மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கும் திரும்புகையிலும்
மனதில்
தோன்றிய கேள்வி இது.
காகிதப்பட்டறை
என்ற இடத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். அங்கே இரண்டு சின்ன கோயில்கள். இரண்டு
கோயில்களுக்கும் இடையில் முப்பது அடிதான் இருக்கும். ஆடி வெள்ளியை முன்னிட்டு இரண்டு
கோயில்களிலும் பிரம்மாண்டமான ஸ்பீக்கர்களை வைத்து பிரம்மாண்டமான ஒலியில் சினிமாப் பாட்டுக்களை
போட்டிருந்தார்கள். வாகனத்தில் அந்த இடத்தை கடக்கும் சில நொடிகளிலியே காது கிழியும்
அளவிற்கு அவ்வளவு சப்தம்.
ஒரு
ராகவா லாரன்ஸ் படத்தில் “பேய்க்கும் பேய்க்கும் சண்டை” என்று வரும்.
அது
போல சாமிகள் லவுட்ஸ்பீக்கர்கள் மூலம் சண்டை போட்டுக் கொள்கிறார்களோ என்று சந்தேகம்
வருமளவு கோயிலை வைத்து விளையாடும் ஆசாமிகள்
நடந்து கொண்டிருந்தார்கள்.
இதில்
முக்கியமான விசேஷம் ஒன்று உண்டு.
இரண்டு
கோயில்களிலும் ஒலி பரப்பிய பாட்டு என்னவென்று புரியவே இல்லை.
இறைவனாரை உருவாக்கியவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை.
ReplyDeleteAll religions should stop this sound pollution
ReplyDeleteசரியான கருத்து.அவசியம் நிறுத்தபட வேண்டிய மதங்களின் மூலம் உருவாகும் சீர்கேடு.
Delete