ஹரியானா
மாநில பாஜக தலைவர் சுபாஷ் பர்லா என்பவரின் மகன்
விகாஸ் பர்லா, வர்ணிகா எனும் ஐ.ஏ.எஸ்
அதிகாரியின் மகளை நள்ளிரவில் காரில் துரத்தி கடத்த முனைந்ததும் எதிர்ப்பு வலுத்ததும்
அவனை வேறு வழியில்லாமல் மீண்டும் கைது செய்ததும் அனைவரும் அறிந்ததே.
“நள்ளிரவில்
அந்தப் பெண்ணுக்கு அங்கே என்ன வேலை” போன்ற கேள்விகளை பாஜக ஆசாமிகள் கேட்பதில் ஆச்சர்யமில்லை.
தவறிழைத்த பொறுக்கிகளை பாதுகாக்க, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் கீழ்த்தர உத்தியைத்தானே அவர்கள் காலம் காலமாக செய்து
கொண்டிருக்கிறார்கள்!
இப்பதிவின்
மூலம் நான் கேட்க நினைக்கும் கேள்வி வேறு.
இப்பிரச்சினை
தொடர்பான செய்திகளை கொஞ்சம் விரிவாக படிக்கிற போதுதான் சுபாஷ் பர்லாவின் அண்ணன் மகன்
விக்ரம் பர்லா, சில நாட்களுக்கு முன்பாகத்தான் ஒரு பதினாறு வயதுப் பெண்ணை கடத்திய போது
கையும் களவுமாக மாட்டிக் கொண்டிருக்கிறான்.
அவன்
மீதும் ஹரியானா காவல்துறை “மைனர் பெண்ணை கடத்தியதாக” வழக்கு பதியவில்லை. அந்த ஊர்ப்
பொதுமக்களின் போராட்டத்திற்குப் பிறகே கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணனும்
தம்பியும் மாட்டிக் கொண்டது இப்போதுதான். எத்தனை கடத்தல்களை இவர்கள் செய்திருப்பார்களோ,
பெண்களை கடத்தி விற்பதுதான் இவர்களின் குடும்பத் தொழிலாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது.
மேற்கு
வங்க மாநில பாஜக மகளிர் அணி தலைவர் இத்தொழிலைத்தான் செய்து வந்து கொண்டிருந்தார் என்பதையும்
கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
இப்படிப்பட்ட
சமூக விரோத தொழில்களை செய்பவர்களுக்கு பாஜகவில் எப்போதும் முன்னுரிமை இருக்கும் அல்லவா?
அவர்களை எல்லாம் பாதுகாக்கவே கிரிமினல் வக்கீல் அருண் ஜெய்ட்லி வேறு இருக்கிறாரே!
ஆகவே
இது ஏதோ குடிபோதையில் பெண் போதையில் நடந்த சம்பவமாக மட்டும் பார்க்காமல் விரிவான விசாரணை
நடத்துவது சரியாக இருக்கும்.
ஆனால்
ஹரியானா காவல்துறையோ அல்லது சி.பி.ஐ யோ செய்யுமா என்பது சந்தேகமே.
பாஜகவின்
ஏவலாட்களால் பாஜக ஆட்களுக்கு எதிராக செயல்பட முடியுமா என்ன?
No comments:
Post a Comment