Saturday, August 12, 2017

யோகி சீ கொடுத்த சொர்க்கம்



உபி முதல்வர் யோகி சீ யின் சொந்த ஊரான கோரக்பூரில் உள்ள மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக வெறும் முப்பதே முப்பது குழந்தைகள் இறந்து போயிருக்கின்றன.

பாவம் யோகி சீ எவ்வளவு பிஸியானவர். அவர் ஆட்சிக்கு வந்த பின்பு இதுவரை 729 பாலியல் வன் கொடுமைகளே நிகழ்ந்திருக்கிறது. அந்த எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த வேண்டாமா என்று அவரது குண்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டியுள்ளது. கொலைகள் இரட்டிப்பாக வேண்டாமா? அப்போதுதானே உ.பி அமைதிப் பூங்காவாக உள்ளது என்று கிரிமினல் வக்கீல் ஜெய்ட்லி சொல்லுவார்.

மருத்துவமனை எப்படி உள்ளது, சாலை உள்ளதா? கழிப்பறை உள்ளதா? வேலை கிடைக்கிறதா? கல்வித்தரம் எப்படி உள்ளது போன்ற அற்ப விஷயங்களை கவனிக்கவா அவர் சாமியார் பொறுப்போடு முதல்வர் பொறுப்பையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மாடுகளுக்கு பிரச்சினை என்றால் சொல்லுங்கள். யோகி சீ கவனிப்பார். மனிதர்களைப் பற்றி எல்லாம் கவலைப்பட முடியாது, 

அந்த குழந்தைகள் எல்லாம் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவை. அதனால்தான் அவையெல்லாம் முதல்வரின் ஊரில் செத்துப் போயிருக்கின்றது.

முதல்வர் ஊரில் இறந்தால் ஸ்ட்ரெய்ட்டாக சொர்க்கம்தான். 

இந்த பாக்கியம் போதாதா அந்த குழந்தைகளுக்கு!!

3 comments:

  1. பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர்களுக்குத்தான்
    தெரியும் அந்த வலி . இந்த "சாமியார்" முதல் மந்திரிக்கு தெரியுமா அவர்கள் வலி?

    ReplyDelete
  2. paei arasaandal pinam thinnum saatherangal. May god bless india (UP also)

    ReplyDelete