Thursday, August 3, 2017

திருநங்கைகளுக்குமா?

"திருநங்கைகள் யாரும் புடவை கட்டிக் கொள்ளக் கூடாது. அவர்கள் பேண்ட் சட்டைதான் அணிந்து கொள்ள வேண்டும்"

இக்கருத்தை திருவாய் மலர்ந்து அருளியிருப்பவர் மோடியின் அமைச்சர்களில் ஒருவரான ராமதாஸ் அத்வாலே.

சமூகத்தில் இப்போதுதான் திருநங்கைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியுள்ளது. அவர்களை பார்க்கும் பார்வையிலும் சின்னதாக மாற்றம் தென்பட ஆரம்பித்துள்ளது. மூன்றாம் பாலினம் என்று நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் தொலைவில் உள்ளது. அதற்குள்ளாக இப்படி ஒரு உத்தரவு போடுகிறார் அமைச்சர். சமூக நீதிக்கான அமைச்சர் இவர் என்பது இன்னொரு கொடுமை.



என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று தன் கருத்தை திணிக்கிற மோடி அரசு இப்போது திருநங்கைகளின் உடையில் தலையிட்டுள்ளது.  

அடுத்து யாருக்கு என்ன கட்டுப்பாடு வரப்போகிறதோ?

1 comment:

  1. பொறுப்பில் இருக்கும்போது பொறுப்பில்லாமல் பேசுவதே அரசியல்வாதிகளின் வேலை.

    ReplyDelete