Friday, August 11, 2017

நம்பாதே, ஏமாற மாட்டாய்




இது முதலாளிகளின் உலகம்
சிறியவரோ, பெரியவரோ
முதலாளிகள்
அது போதும்.

முதலாளிகளால்
முதலாளிகளுக்காக
நடத்தப்படும் 
முதலாளிகளின் ஆட்சியில்
நீதிமன்றம் மட்டும்
யாருக்காய் இயங்கும்?

ஊரே அழிந்து போன
போபால் வழக்கோ
குழந்தைகள் எரிந்து போன
குடந்தை வழக்கோ
குற்றவாளிக் கூண்டில்
வேறு யாரோ நின்றிருந்தால்
நீதி தேவதை கண் திறந்து
அருள் பாலித்திருக்கலாம்.
இங்கே நின்றதோ
முதலாளிகளின் சுரண்டல் கொள்கை.
அதற்கெதிராய் எப்படி?

இறந்த குழந்தைகளை
மீண்டும் எரித்திட்டது
தீர்ப்பென்ற பெயரில்
அநீதியின் நெருப்பு.
 

விற்கப்படும் இடங்களில்
எப்படிக் கிடைக்கும்
ஏழைகளுக்கு நீதி?

நம்பினால்தான் ஏமாற்றம்.
நம்பாதே, 



 

 

1 comment:

  1. அரசுகளை நீதிமன்றங்களை ஆட்டிவைக்கும் ஆணவம் கலந்த அந்த கபட சிரிப்பு..
    ஏழை வயிறு காய தான் அதி ஆடம்பர உணவுதின்று ஏசி குள்ளேயே இருந்து உப்பிய அந்த கன்னங்கள்..
    அதிஉயர் சரக்கடித்து உப்பிய தொப்பைகள்..
    வேறு மலை காடுகளை குடையலாம் என்ற வெறி தெறிக்கும் கண்கள்...
    நாத்தம் புடிச்ச முதலாளித்துவ அடையாளமாகிய கோட்டு சூட்டு..
    அரைவாசி பிளாஸ்டிக் ஆகிய மனைவிகள்...


    அப்படியே ஒரு பக்கட் ஆசிடை கொண்டுபோய் ஊற்ற வேண்டும் போலிருக்கும்.

    ReplyDelete