திருடர்கள், மோசடிப்பேர்வழிகள், சூதாடிகள், ஊரையடித்து உலையில் போட்ட அயோக்கியர்கள் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் போன்ற பலர்தான் அருண் ஜெய்ட்லியின் வக்கீல் தொழிலில் அவரது கட்சிக்காரர்கள்.
இப்போது பாஜகவிலும் அவர்கள்தான் இருக்கிறார்கள். மோசமானவர்களை பாதுகாப்பது என்ற அதே பழைய தொழிலைத்தான் அமைச்சராகவும் ஜெய்ட்லி இப்போதும் செய்து கொண்டு இருக்கிறார்.
நேற்று கேரளாவிலும் அதே குறுக்கு புத்தி வக்கீலாகவே நடந்து கொண்டிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் காரர் ராஜேஷை கொடூரமாகக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் ஆட்கள்தான் என்பது நிரூபணமான பின்பும் மீண்டும் அதை மார்க்சிஸ்டுகள் மீது திருப்பி விடும் கேவலமான தந்திரத்தை செய்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் காரர்கள் நடத்தும் அயோக்கியத்தனத்தைப் பற்றி கேட்டாலே எரிந்து விழுகிறார். பாஜக ஆளும் மாநிலங்கள் எல்லாம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்றும் கதைக்கிறார்.
அவர்கள் ஆளாத மற்ற மாநிலங்களில் எல்லாம் மிரட்டல் மூலமாக, குதிரை பேரங்கள் மூலமாக, ஆளுனர்களின் ஆட்சிக் கவிழ்ப்பு மூலமாக தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டார்கள்.
எந்த மோசடி முறை மூலமும் நெருங்க முடியாத கேரளாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் தோழர் பிணராயி விஜயனின் ஆட்சியைக் கலைக்கவும் கலவர நாடகங்களை அரங்கேற்றத் துடித்துள்ளனர்.
அமித் ஷாவை விடுவித்து ஆளுனரான சதாசிவம் எனும் கையாள் கொண்டு ஏதாவது செய்ய முடியுமா என்று துடிக்கிறார்கள்.
அருண் ஜெய்ட்லியின் கேரள விஜயம் அதற்காகத்தான்.
அருண் ஜெய்ட்லியின் இந்த மோசமான தொழில் அருவெறுப்பாக இருக்கிறது. இன்னும் கடுமையாக திட்ட வேண்டும் என்று ஆசை இருந்தாலும் நாகரீகம் தடுக்கிறது.
கேரளாவை சோமாலியாவோடு ஒப்பிட்டு "போமோனே மோடி" என்று சமூக ஊடகங்களில் இவரது பாஸ் வாங்கிய செருப்படியை நினைவில் கொள்வது ஜெய்ட்லிக்கு நல்லது. ஒரு வேளை இவருக்கு நிஜத்திலேயே நிகழலாம்
No comments:
Post a Comment