மோடிக்கும்
அமித் ஷாவுக்கும் இடையிலான ஒரு உரையாடல். கற்பனைதான் என்றாலும் இப்படி நடந்திருக்க வாய்ப்பு
கண்டிப்பாக உண்டு.
மோடி : என்ன அமித்து, என்னோட சுதந்திர தினப்பேச்சைப் பற்றி என்ன பேசறாங்க?
அமித் ஷா: போங்கண்ணே, இந்தாளுக்கு மார்பு 56 இஞ்ச் இருக்கோ இல்லையோ,
வாய் அதுக்கு மேல. நல்லா கதை விடறான்னு சொல்றாங்க
மோடி: ஜனவரி சஸ்பென்ஸ் பற்றி
அமித் ஷா : எல்லாத்தையும்தானே
ஏற்கனவே பறிச்சுட்டாங்களே, இன்னும் என்ன பாக்கி இருக்குன்னு கேட்கறாங்க?
மோடி : நம்மாளுங்க எல்லா இடத்திலயும் கொடி ஏத்துனாங்களா?
அமித் ஷா: பல பேரு நம்ம கட்சிக் கொடிக்கம்பத்துலேயே ஏத்திட்டாங்க. இதான்
இவனுங்க தேசியக் கொடிக்கு கொடுக்கற மரியாதைன்னு அதுக்கு வேற திட்டறாங்க
மோடி : சரி, வேற ஒன்னும் பிரச்சினை இல்லையே?
அமித் ஷா: திரிபுரால மாணிக்
சர்க்கார் பேசினதை ஒளிபரப்பாம தடுத்தோம் இல்லையா, அதை வச்சு இதுதான் சுதந்திரமான்னு
கழுவி கழுவி ஊத்தறாங்க. மோகன் பகவத் விஜயதசமி அன்னிக்கு பேசறதை நேரடி ஒளிபரப்பு செஞ்சீங்களே,
அந்தாள் என்ன பிரதமரா, ஜனாதிபதியா, சி.எம் பேசறதை மட்டும் இருட்டடிப்பு செய்வீங்களான்னு
கேட்கறாங்க
மோடி: அபச்சாரம், அபச்சாரம். அந்தாளு மாணிக் சர்க்கார் என்ன நம்ம சர்சங்சாலக்காயா?
அந்தாளா என்னை பிரதமராகவும் உன்னை கட்சித் தலைவராகவும் ஆக்கினாரு?
மோகன் ஜி யாரு அண்ணன், எனக்கு அண்ணன், உனக்கு அண்ணன், தம்பிக்கெல்லாம்
அண்ணன். அண்ணன்டா.
அவரு கோயில் காளை மாதிரி, எங்க வேணா போகலாம். என்ன வேணா செய்யலாம்.
ஆனா அந்த சர்க்கார், நம்ம பண்ற தப்பையெல்லாம் பேசி, சுதந்திரம், கொள்கை,
அடிமைத்தனம்னு எல்லாம் பேசினா எப்படிய்யா அதை போட முடியும்? அதிகாரத்தை கையில வச்சுக்கிட்டு
அதை எப்படிய்யா நம்மால அனுமதிக்க முடியும்.
சரி, சரி வழக்கம் போல அப்படியெல்லாம் எதுவும் நடக்கலைன்னு யாராவது அல்லக்கையை
விட்டு அறிக்கை கொடுக்க வைச்சுடு!
அமித் ஷா: அப்படியும் செஞ்சோம். நம்ம சின்னத்தம்பிங்க சில பேரு அதை
ஃபேஸ் புக்குல கூட போட்டாங்க. ஆனா சர்க்கார் பேச்சை மாத்துன்னு எழுதின கடிதத்தை பதிலா
போட்டுட்டாங்க, பாவம் நம்ம தம்பிங்களால அதுக்கப்பறம் வாயே திறக்க முடியலை.
மோடி : சரி சரி கூடிய சீக்கிரம் எமர்ஜென்ஸியே கொண்டு வந்துடறேன். அப்பதான்
ஒத்தனும் வாயே திறக்க மாட்டான்.
அமித் ஷா: அப்படியே செய்யுங்கஜி. அதையும் பாராட்டதற்கு ஒரு பெரிய முட்டாள்
கூட்டமே கைவசம் இருக்கு.
பெரிய முட்டாள் கூட்டமே இருக்கு. ----------> another name is communist
ReplyDeleteசங்கிகள் முட்டாள்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள்
ReplyDelete