Thursday, August 3, 2017

உங்களுக்கு பிடிக்கிறதா என்பது முக்கியமே இல்லை ரஜனி . . .



உங்கள் நிறம் என்ன என்பதை இத்தனை நாள் புரியாமல் இருந்தவர்களுக்கும்  நீங்கள் யார் என்பதை காண்பித்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி மிஸ்டர் ரஜனிகாந்த்.

தமிழில் உங்களுக்கு பிடிக்காத வார்த்தைகளில் ஒன்றாக "வேலை நிறுத்தம்" என்பதை சொல்லியுள்ளீர்கள். உங்கள் படத்தைப் பார்த்து உங்களை உழைப்பாளியாக, ஆட்டோ தொழிலாளியாக நினைத்துக் கொண்டு இருக்கும் அப்பாவி ரசிகர்களுக்கு நீங்கள் ஒரு முதலாளி, முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதி என்பதை  அம்பலப்படுத்திக் கொண்டதற்கு நன்றி.  

வேலை நிறுத்தம் என்பது எங்களுக்கும் அவ்வளவு பிடித்தமானது அல்ல. ஒரு வேலை நிறுத்தம் நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது எங்களுக்கே நன்றாகத் தெரியும். உங்கள் படங்களில் காண்பிப்பது போல நொடிப் பொழுதில் துவக்கப்படுவதல்ல வேலை நிறுத்தம். எவ்வளவு தயாரிப்பு தேவைப்படும் தெரியுமா? ஒரு தொழிலாளியை மனரீதியாக தயார் செய்யாமல் வேலை நிறுத்தம் செய்திட முடியாது.

வேலை நிறுத்தம் என்பது தொழிலாளிகளின் கடைசி ஆயுதம். அவனது நியாயம் தொடர்ந்து மறுக்கப்படும் போது, பேச்சுவார்த்தை உள்ளிட்ட அனைத்து வாய்ப்புக்களும் மறுக்கப்படும் போதுதான் அந்த இறுதி ஆயுதத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. 

துரோகிகள், கருங்காலிகள், உடனிருந்து குழி பறிக்கும் நயவஞ்சகர்கள் என பல சவால்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும் என்பது தெரியுமா உங்களுக்கு? ஊதிய வெட்டு தொடங்கி பணி இழப்பு வரை அனைத்து அபாயங்களுக்கும் தயாராகித்தான் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. 

ஒரு வேலை நிறுத்தம் தோற்றுப்போனால் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தொழிலாளர்களை அணி சேர்ப்பதன் சிரமம் புரியுமா உங்களுக்கு?

யாருக்கும் யாருக்கும் என்றோ, எதற்காக என்றோ சொல்லாமல் உங்கள் ரசிகர்களை ஏமாற்ற  போர், போர் என்று சில நாட்கள் முன்பாக முழங்கினீர்கள் அல்லவா?  

தொழிலாளி நடத்தும்  வர்க்கப் போர்தான் வேலை நிறுத்தம். 

அந்த போரிலே நீங்கள் யார் பக்கம் இருப்பீர்கள் என்பது நன்றாக தெரிந்து விட்டது. உங்கள் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்த தமிழர்களில் 90 % க்கும் மேற்பட்டவர்கள் உழைப்பாளி மக்கள்தான். நீங்கள் அவர்கள் பக்கம் நிற்க மாட்டீர்கள் என்று எங்களுக்கு முன்பே தெரிந்த உண்மையை இப்போது நீங்களே சொல்லி விட்டீர்கள்.

உங்களுக்கு பிடிக்கிறதா, பிடிக்கவில்லையா என்பது எங்களுக்கு முக்கியமுமில்லை, அவசியமில்லை.

எங்களுக்கு அவசியம் என்றால் நிச்சயம் நாங்கள் நடத்துவோம் "வேலை நிறுத்தம்" 

ஏனென்றால் அதுதான் எங்கள் வாழ்க்கையை பாதுகாக்கும். சோறு போடும். மனிதனாய் கௌரவமாய் நடைபோட வைக்கும்.

உங்கள் திரைப்படங்கள் அல்ல. 


4 comments:

  1. செருப்படி கொடுத்து விட்டீர்கள் நண்பரே.... தொழிலாளிக்குதானே உள் விடயங்கள் தெரியும்.

    தொழிலாளியாய் நடிப்பவனுக்கு தெரியாது கடைசிவரை...

    ReplyDelete
  2. டுபுக்கு ராஜ்August 3, 2017 at 12:09 PM

    ஏம்பா இவனையெல்லாம் இன்னும் சீரியசா எடுத்துக்கொண்டு...எப்போ நம் மக்கள் மதுவை சாத்தானை போல் போட்டு உடைப்பது போல் இந்த சினிமா எனும் நஞ்சை தவிர்த்து இந்த ஒட்டுண்ணிகளை அடித்து துரத்துவார்களோ..அவர் பெரிய ரமணா அவருக்கு பிடிக்காத வார்த்தை வேலைநிறுத்தம் மக்கா
    இவனுக்கு உழைப்பை பத்தி என்ன தெரியும் ? எதோ உழைப்பாளி அப்பிடியே வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு கொண்டிருப்பதே பெருமை என்ற கள்ள சிந்தனையே, எம் ஜி ஆர் அன்னை தெரசா போன்றவர்களின் 'ஏழை' வரைவிலக்கணமும் இப்படியே. லாரன்சு விசய் போன்றவர்களின் 'சொந்த முயற்சியில் முன்னேறு தோழா கப்ஸாவும் இதே வகையே. மக்களின் பிரச்னைக்கு காரணங்களை மக்கள் அறிந்து கொள்ளவிடாமல் மக்களால் தங்களையே நொந்து கொள்ள செய்வது. விஷப் பூச்சிகள். இவனுங்களுக்கு பின்னல் செல்கிறதே இளைய கூட்டம்.

    இவனை விட பாவிகளுக்கு கடை சந்தர்ப்பம் வழங்கும் சாது சுந்தர் *****ராஜ் எவ்ளோ மேல் ஹிஹிஹ்ஹிஹி

    ReplyDelete
  3. ஏம்பா இவனையெல்லாம் இன்னும் சீரியசா எடுத்துக்கொண்டு...எப்போ நம் மக்கள் மதுவை சாத்தானை போல் போட்டு உடைப்பது போல் இந்த சினிமா எனும் நஞ்சை தவிர்த்து இந்த ஒட்டுண்ணிகளை அடித்து துரத்துவார்களோ..அவர் பெரிய ரமணா அவருக்கு பிடிக்காத வார்த்தை வேலைநிறுத்தம் மக்கா
    இவனுக்கு உழைப்பை பத்தி என்ன தெரியும் ? எதோ உழைப்பாளி அப்பிடியே வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு கொண்டிருப்பதே பெருமை என்ற கள்ள சிந்தனையே, எம் ஜி ஆர் அன்னை தெரசா போன்றவர்களின் 'ஏழை' வரைவிலக்கணமும் இப்படியே. லாரன்சு விசய் போன்றவர்களின் 'சொந்த முயற்சியில் முன்னேறு தோழா கப்ஸாவும் இதே வகையே. மக்களின் பிரச்னைக்கு காரணங்களை மக்கள் அறிந்து கொள்ளவிடாமல் மக்களால் தங்களையே நொந்து கொள்ள செய்வது. விஷப் பூச்சிகள். இவனுங்களுக்கு பின்னல் செல்கிறதே இளைய கூட்டம்.

    இவனை விட பாவிகளுக்கு கடை சந்தர்ப்பம் வழங்கும் சாது சுந்தர் *****ராஜ் எவ்ளோ மேல் ஹிஹிஹ்ஹிஹி

    ReplyDelete
  4. எம்ஜிஆர் என்ற நடிகரை புரச்சி தலைவராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தா பாண்டியனின் துதி பாடல்களுடன் ஜெயலலிதாவை புரச்சி தலைவியாகவும் கண்ட மக்கள்.

    ReplyDelete