சம்பவம் 1
கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை
கிடையாது. சுயேட்சைகளுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்து
பாஜக ஆட்சி அமைக்கிறது.
சம்பவம் 2
காங்கிரஸ் உறுப்பினர்கள் தாவுகின்றார்கள். ராஜினாமா செய்து
பாஜக வேட்பாளராகி இடைத்தேர்தலில் வெற்றி பெறுகின்றனர்.
எட்டியூரப்பா தலை தப்பிக்கிறது.
சம்பவம் 3
சுரங்கப் புகழ் ரெட்டி சகோதரர்களால் அவ்வப்போது எட்டியூரப்பா
நாற்காலி தடுமாறுகின்றது. உள்ளே புகுந்து தாம் நாற்காலியை
தட்டிசசெல்லலாமா என்று காங்கிரஸ் நாவில் எச்சில் ஒழுக
பரத்வாஜை கவர்னராக அனுப்புகின்றது.
சம்பவம் 4
எட்டியூரப்பாவை ஆதரித்த சுயேட்சைகள் ஆதரவை வாபஸ்
பெறுகின்றார்.
சம்பவம் 5
நம்பிக்கை வாக்கு பெற கவர்னர் சொல்கின்றார். ஆதரவு வாபஸ்
பெற்ற சுயேட்சைகளின் பதவியை சபாநாயகர் பறிக்கிறார். எட்டியூரப்பா பதவி மீண்டும் பிழைக்கிறது.
சம்பவம் 6
சுயேட்சைகளை சபாநாயகர் போட்டுத்தள்ளியது சரியல்ல, பதவியில்
அமர்த்து என்று உச்ச நீதிமன்றம் சொல்கின்றது.
சம்பவம் 7
எட்டியூரப்பவிற்கு ஆதரவை வாபஸ் பெற்ற சுயேட்சைகள் மீண்டும்
பதவி பெறுவதால் அவருக்கு பெரும்பான்மை கிடையாது. ஜனாதிபதி
ஆட்சியை அமுலாக்கு என்று கவர்னர் பரத்வாஜ் பரிந்துரை.
சம்பவம் 8
ஆதரவு வாபஸ் பெற்ற சுயேட்சைகள் மீண்டும் பல்டி. எத்தனை கோடிகள்
நடுவில் விளையாடியது என்ற தகவல் இல்லை.
சம்பவம் 9
பரத்வாஜை திரும்பப்பெறு, எட்டியூரப்பாவை நீக்காதே என பாஜக
போர்க்கொடி, டெல்லிக்கு காவடி, ஒன்னு,ரெண்டு, மூணு என
ஜனாதிபதி முன்பு தலை எண்ணுதல்.
இறுதியாக இப்போது.
எட்டியூரப்பாவிற்கு முழுமையான பெரும்பான்மை உள்ளது. அவரது
நல்லாட்சி தொடரும் - இது பரத்வாஜ்
ஆளுநர் நல்ல மனிதர், எனது இனிய நண்பர் - இது எட்டியூரப்பா
மொத்தத்தில் எட்டியூரப்பா, அவரது சகாக்கள், கவர்னர் எனும் ஆட்டுத்தாடி பரத்வாஜ்,
சபாநாயகர், சுயேட்சை எம்.எல்.ஏ க்கள்,
காங்கிரஸ் கட்சி, பாஜக, சீச்சீ இந்த பழம்
புளிக்கும் என்பதால் யோக்கிய அவதாரம்
எடுத்த மத்தியரசு என எல்லோருமே
வெட்கம்கெட்டவர்கள்...தூ...
செருப்படி...................
ReplyDeleteதூ..தேரிக்கா ........
ReplyDeleteவெட்கம்கெட்டவர்கள்...தூ...
ReplyDelete