இந்தியாவில் நீதி தேவதைக்கு இன்னும் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று நேற்று இரவு ஒரு கவிதை போன்ற வடிவின் வாயிலாகக் கூறினேன்.
காலை நாளிதழை பார்க்கையில் மிகப் பெரிய அதிர்ச்சி. போபால்
விஷ வாயு விபத்தில் முன்பு அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்ற முடியாது என்று நேற்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது மிகவும் அதிர்ச்சிகரமானது,
வேதனையானது.
பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள்,
சில லட்சம் பேரை முடமாக்கியவர்கள், இந்த உலகில் இன்னும் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், அடிமாட்டு விலையை விட
மோசமான தொகை இழப்பீடாக தரப்பட்டுள்ளது, அளிக்கப்பட்ட
தண்டனையும் கூட பிக்பாக்கெட் திருடனைக் காட்டிலும் குறைவு.
முதல் குற்றவாளி வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவில் உல்லாச
வாழ்க்கை நடத்தி வருகின்றான்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். தாமதம் என்ற
காரணம் சொல்லி இங்கே நீதி மறுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள்
மீது , நிர்வாகத்தின் மீது, அதிகாரிகள் மீதெல்லாம் வேகமாக சுழலும் நீதிமன்றத்தின் சவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது மட்டும்
கருணை காண்பிப்பது உலகமயத்தின் ஒரு மோசமான விளைவு.
நேற்று நான் சொன்னதை வருத்ததுடன் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.
வேதனையோடு இப்போது அறிவிக்கிறேன்.
இந்தியாவில் ஏது நீதி?
ReplyDeleteமுதலாளிகளுக்கான நீதி தேவதை எக்கணமும் உயிரோடிருப்பாள். நமக்குதான் தேவதை கிடையாது. ஆனால் இருப்பதாக எல்லோரும் நம்ப சொல்கிறார்கள்
ReplyDelete