சர்வதேச நிதி மையம் ( International Monetary Fund ) ன் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கைது செய்யப்பட்டுள்ளார். விமானம் ஒன்றில் அமர்ந்திருந்த அவர் விமானம் புறப்படுவதற்கு பத்து நிமிடம் முன்பாக வெளியே கொண்டுவரப்பட்டு கைது செய்துள்ளனர். நியுயார்க் விமான நிலையத்தில் இந்த கைது நடந்துள்ளது.
இவர் தங்கியிருந்த நியுயார்க் விடுதியில் பணியாற்றும் பெண்ணிடம் பாலியல் அத்து மீறல் செய்தார் என்பதற்காக இந்த நடவடிக்கை.
மிக மிக முக்கியமான பொறுப்புக்களில் உள்ளவர்கள்தான் இப்படி
சின்னத்தனமாக நடந்து கொள்வார்களோ?
இந்த லட்சணத்தில் இவர் பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி பதவிக்கு வேறு
போட்டியிடுவதாக இருந்தாராம்!
என்ன நடக்கின்றது என்று பார்ப்போம். இவருக்கு தண்டனை கிடைக்கிறதா அல்லது ஐ.எம்.ஃ எப் தலைவர் என்ற தகுதியில்
சுதந்திரமாக வெளி வரப்போகின்றாரா என்று ...
No comments:
Post a Comment