Saturday, May 7, 2011

உடல் இளைக்க, நீண்ட நாள் வாழ உடற்பயிற்சி அவசியமே இல்லை

நீண்ட நாள்  உயிர் வாழ, உடலை இளைக்க வைக்க உடல் பயிற்சி 
தேவை, நடைப் பயிற்சி தேவை, நீச்சல் தேவை, மீன் சாப்பிடுவது 
நல்லது  என்றெல்லாம்  சொல்லப்படுவதெல்லாம்  வெறும் மாயை
என்பதை  பின் வரும் உண்மைகள்  தகர்த்தெறிகின்றது. 
நடை நல்லதென்றால்  அக்காலத்து  தபால்காரர்கள்  சாகாவரம் 
பெற்ற  சிரஞ்சீவிகளாக  இருக்க  வேண்டுமே!  அவர்கள்  எல்லாம்
எப்படி  இறந்து போனார்கள்? 

எப்போதும்   நீச்சலடித்துக்  கொண்டிருக்கிற , மீனை  மட்டுமே 
உணவாகக் கொண்டுள்ள  திமிங்கலம்  மிகவும் குண்டாக உள்ளதே! 

எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிற, துள்ளி குதித்துக் கொண்டிருக்கிற 
முயலின்  ஆயுட்காலம்  எவ்வளவு  தெரியுமா?  வெறும் பதினாறு 
ஆண்டுகள்  மட்டுமே! 

ஆனால்  எந்த வேலையும் செய்யாத் சோம்பேறி  என்று தூற்றப் 
படுகின்ற  ஆமையோ நானூறு  ஆண்டுகள்  வாழ்கின்றது. 

ஆகவே  உடற்பயிற்சி துறந்து வாழ்க்கையை  மகிழ்ச்சியாக 
வாழ்வீர்களாக! 

----


----


----


----


----


----

----
----


-----


----


----


உங்களுக்கு   கோபம்  வந்து   அடிக்க வேண்டும்  என்று  நினைத்தால்
என்னை தேடாதீர்கள்.  எனக்கு  இந்த மின்னஞ்சல்  அனுப்பியவரை  
நானும்  தேடிக் கொண்டிருக்கிறேன்.  ஆனாலும்  எனக்கு வசதியான
செய்திதான்  இது! 
 

 

No comments:

Post a Comment