Wednesday, May 11, 2011

நீதி தேவதைக்கு இன்னும் உயிர் உள்ளது?


















அவ்வப்போது  வருகின்ற
அற்பமான 
சந்தேகம் இது.


இந்தியாவில்  நீதி மன்றங்கள்
இன்னமும் 
உயிரோடுதான் உள்ளதா? 
ஏன் இந்தக் கேள்வி?
எதற்காக   இந்த  சந்தேகம்?
நல்லதே உந்தன் 
கண்களில்  தெரியாதா?
கோபமாய்  கேட்கலாம் நீ!


என்ன செய்வேன்!
நான் காண்பதெல்லாம் 

முதாளித்துவமும் 
காவியுடையும்
ஊடுருவிப் போன 
நீதிமன்றங்கள் 


உண்மைகளைக் காட்டிலும்
சாட்சியங்களையே நம்பும் 
நீதிமன்றங்கள் 


வழக்கறிஞரின் 
வாதங்கள்  அல்ல
பேரங்களையே  
பெரிதாய்  கருதும்
நீதிமன்றங்கள் 


என் சொத்துக் கணக்கை 
கேட்க இவர்கள் யார்
என கோபமாய் மறுக்கின்ற, 


அடுத்தவன் சொத்தை
அபகரிக்கும் வழக்கில் 
தீர்ப்பு சொல்லிவிட்டு 
அரசு நிலத்தை 
தானே  அபகரிக்கின்ற 


மாண்புமிகு  நீதியரசர்கள். 

தலைவன் எவ்வழி,
தீர்ப்பும் அவ்வழி. 


அயோத்தி மசூதி
அமைந்த இடம் 
உரிமை கேட்டு  
வழக்காடி  
வருடங்கள்  பல 
உருண்டோடிப் போன பின்பும்
வந்தது  ஒரு தீர்ப்பு.
ஒரு மகனுக்க்காய்
இரு அன்னையர் 
அன்று அரசன் முன் 
நின்ற போது
அவனும்  சொன்னான்.


அருமை மகனை 
இரண்டாய் 
அரிந்திடு,
ஆளுக்கொன்றாய் 
கொடுத்து  அனுப்பிடு.

அரசன் வழியில் 
அலகாபாத்தும்
சொல்லி விட்டால் 


எப்படித்தான்  நம்பிடுவேன்!
யாரைத்தான் நம்பிடுவேன். 


கண்கள் கட்டப்பட்ட 
நீதி தேவதைக்கு 
காடராக்ட் என்றால்
அதை வேண்டுமானால்
நம்பிடுவேன் 


சோர்வின் துயரில்
தவிக்கும் வேளையில் 
டெல்லியிலிருந்து  
ஒரு குரல் 


அலகாபாத் அபத்தத்தை 
நிறுத்தி வைக்கிறோம் 
நாங்கள்  
உச்ச இடம் 
உறுதியாய்  சொன்னது.


நானும் சொல்கிறேன் 
நீதி தேவதைக்கு 
இன்னமும் உயிர் 
ஒட்டிக்கொண்டுதான்
இருக்கின்றது.


                                                                    
   

No comments:

Post a Comment