நினைக்கவே நெஞ்சு கொதிக்குதுடா,
நஞ்சை நெஞ்சில் கொண்ட மனிதர் கண்டு!
உயிர் காக்கும் மருத்துவராம்,
உன்னதமான தொழிலதுவாம்!
மருத்துவர்களை உருவாக்கும்
(சண்டிகரில் தலித் மாணவன் ஒருவன் தேர்ச்சி பெறக்கூடாது என்று
மதிப்பெண்களை குறைத்து அவனை தற்கொலை செய்ய
வைத்த கொடூரம் பற்றிய தகவல் இன்றைய ஹிந்து
நாளிதழில் வந்துள்ளது.)
நஞ்சை நெஞ்சில் கொண்ட மனிதர் கண்டு!
உயிர் காக்கும் மருத்துவராம்,
உன்னதமான தொழிலதுவாம்!
மருத்துவர்களை உருவாக்கும்
கல்லூரி ஆசிரியராம்
கல் நெஞ்சு கொண்டு
கிராமத்து மாணவனை
துரத்தி விட்டான்
மருத்துவக் கல்லூரியிலிருந்து அல்ல,
இந்த உலகிலிருந்தே,
சாதி வெறி என்னும் பித்து பிடித்தவன்
சாதிக்க வந்த மாணவனை
சாவூருக்கு அனுப்பி வைக்க
விடைத்தாளில் விளையாடினான்.
சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தும்
மதிப்பெண் குறைத்தான்,
மாணவனின் ஆயுளையும் குறைத்தான்.
இந்தியாவில் தீண்டாமை இல்லை
என இனி யாரும் சொல்லாதீர்கள்!
வறுமை போல, ஊழல் போல
தீண்டாமையும் இங்கே
தேசிய வியாதி.
ஒடுக்கப்பட்டவர் குரல்களை
மேலும் ஒடுக்குவதில் மட்டுமே
இந்திய ஒருமைப்பாடு!
(சண்டிகரில் தலித் மாணவன் ஒருவன் தேர்ச்சி பெறக்கூடாது என்று
மதிப்பெண்களை குறைத்து அவனை தற்கொலை செய்ய
வைத்த கொடூரம் பற்றிய தகவல் இன்றைய ஹிந்து
நாளிதழில் வந்துள்ளது.)
படித்த சமூகம் தீண்டமையை இரட்டைக் குவளைக் களுக்கு பதிலாக புதிய அணுகுமுறைகளை கையாளுகிறது.
ReplyDelete