Sunday, May 15, 2011

நள்ளிரவுக் கொள்ளையன் மன்மோகன்சிங்



கேரளாவிலும்  மேற்கு வங்கத்திலும், அஸ்ஸாமிலும்   ஆட்சியில்  அமர 
வைத்த  மக்களுக்கு  சிறப்புப் பரிசாகவும்  ஒட்டு மொத்த  இந்தியர்களுக்கு 
பொதுவான பரிசாகவும்  மத்தியரசு   பெட்ரோல்  விலையை நேற்று  இரவு 
இல்லைஇல்லை  நள்ளிரவு  முதல்   அளித்துள்ளது.  ஒரு லிட்டர் ஐந்து 
ரூபாய்  உயர்வு   என்றால்  எனக்கு  மாதம்  ரூபாய் எண்பது ரூபாய் 
செலவினம்  அதிகம்  ஆகும். 


இந்த விலை உயர்வு  அநியாயம், அக்கிரமம், அராஜகம்  என்று  எப்படிப்பட்ட  வார்த்தைகளில்  வேண்டுமானாலும்  விவரிக்கலாம்.  மற்ற நேரங்களில்   வாயில் கொழுக்கட்டை  அடைத்தது போல  இருக்கும் 
மன்மோகன்சிங்   பெட்ரோல்  விலையை  எப்படி  எண்ணெய் நிறுவனங்களே   நிர்ணயம்  செய்து கொள்கிறதோ  அது போலவே டீசல் 
விலையினையும்  அவைகளே  தானே  முடிவு செய்து கொள்ளும்  என்று 
உற்சாகத்துடன் சொல்கின்றார். 


( பெட்ரோல்  விலையை உயர்த்திய மகிழ்ச்சியில் மன்மோகன் ) 

ஆக  
பெட்ரோல்  விலை  போல  டீசல் விலையும்  இனி  அதிகரித்துக் கொண்டே போகப் போகின்றது.  இந்த விலை  உயர்வை  தவிர்க்கவே முடியாதா?  

எப்படி  சர்வதேச சந்தையில்  கச்சா எண்ணெய்  உயரும் போது  இங்கே 
மட்டும்   உயர்த்தாமல்  இருக்க முடியும்  என்று  அரசோ, அதிகாரிகளோ 
கேள்வி கேட்டால் சரிதானே  என்று  தலையாட்டி விட்டு செல்பவர்கள் 
ஒரே  ஒரு கேள்விக்கு  மட்டும்  பதில் சொல்லுங்கள்! 

இந்தியா தவிர  அக்கம் பக்கம் உள்ள  எல்லா நாடுகளிலும் பெட்ரோல் விலை  குறைவாக உள்ள போது  இந்தியாவில்  மட்டும்  ஏன்  மிக மிக 
அதிகமாக  உள்ளது? 

இந்தியா போல  வேறு  எந்த நாட்டிலும்  கச்சா எண்ணெய்க்கான  இறக்குமதி வரி, உற்பத்தி  வரி, விற்பனை  வரி  போன்றவை  இவ்வளவு 
அதிகமாக  கிடையாது.  

சின்னஞ்சிறு  நாடு வியட்நாம்  சர்வதேச சந்தையில்  கச்சா எண்ணெய் 
உயரும் போது அந்த சுமை  மக்கள் மீது  விழாமல்  எப்படி  சமாளிக்கிறது 
தெரியுமா? 


சுங்க வரியை குறைத்துக் கொண்டே வருகின்றது. எண்ணெய் நிறுவனங்களுக்கு   நேரடியாய்  மானியம்   அளிக்கிறது.  நுகர்வோர் வாங்கும்  ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும்   ஒரு தொகை  விலை உயர்வை சமாளிப்பதற்கான  ஒரு பிரத்யேக  நிதியில்  வைக்கப்படுகின்றது.   

ஆனால்   இந்தியாவிலோ  வரிகள்  உயர்த்தப்படுகின்றது.  கச்சா எண்ணெய்  விலை  உயர்ந்தால்   அரசுக்கு வரி வருவாய் அதிகமாகும். 
உற்பத்தி அதிகமானாலும்  இதே  கதைதான்.  எண்ணெய் நிறுவனங்களின் சுமையே  அரசு விதிக்கும்  வரிகள்தான். வரிகளை குறைக்க மத்தியரசு 
தயாராக இல்லை.  

இன்னொரு புள்ளி விபரம்  அதிர்ச்சியளிக்கும்.  எண்ணெய் நிறுவனங்கள் 
நூறு ரூபாய்  வரி கொடுததால்  அரசு அளிக்கும் மானியம்  இருபத்தி ஐந்து
ரூபாய்தான்.   

வியட்நாம் போல  இந்தியாவிலும்  எண்ணெய் தொகுப்பு நிதி ( Oil Pool Fund) 
என்ற பெயரில்  ஒரு நிதி இருந்தது.  அதிலே பல்லாயிரக்கணக்கான கோடி  ரூபாய்களும்  இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்கும்  நிதி அது. ஆனால்  வாஜ்பாய் அரசு அந்த நிதியை ஒழித்துக் கட்டி விட்டது. 

இந்திய மக்களின்  கொஞ்ச நஞ்ச வருமானத்தையும்  கொள்ளையடிக்கிற 
கள்வனாக  மன்மோகன்சிங் அரசு மாறி விட்டது  கொடுமை.

இப்படி கஜானாவில் நிதி சேர்த்தால்தானே  இந்த ஊழல் பேர்வழிகள்  அதை  தங்களின்  சொந்த கஜானாவிற்கு  கடத்திச செல்ல முடியும்!

 

3 comments:

  1. நல்ல கட்டுரை

    ReplyDelete
  2. Please add link to facebook, orkut, buzz etc, so directly this artilce can be posted them from here easily.

    ReplyDelete