Wednesday, May 25, 2011

கலைஞரை பார்த்தால் பாவமாகத்தான் உள்ளது

  ஆட்சியை மிக மோசமான முறையில் பறிகொடுத்த கலைஞருக்கு உடனடியாக வந்த சோதனை கனிமொழியின் கைது. மந்திரி பதவி வேண்டும்  என்று முன்பு தள்ளாத வயதிலும் டெல்லி சென்றவர் , இப்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகளைப் பார்க்க இன்னும் சோகத்தோடு டெல்லி சென்றார் .

    அடுத்த சோகம் பேரன் தயாநிதி மாறன் வடிவில் வந்துள்ளது.குடும்பச் சண்டையில் ஒதுக்கி வைக்கப்பட்ட நேரத்தில் விரக்தியின் உச்சத்தில் தயாநிதி மாறன் அமெரிக்க தூதரக அதிகாரியிடம் புலம்பியது விக்கி லீக்ஸ் வாயிலாக ஹிந்து பத்திரிக்கையில் அம்பலமாகியுள்ளது. 

     இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம் தேவையற்றது ,ஆட்சியில்    ஊழல் அதிகமாகி விட்டது , இலங்கை பிரச்சனைக்காக எம்பிக்கள் ராஜினாமா என்பது மின்வெட்டு பிரச்சனையை சமாளிக்க செய்த நாடகம் , உண்ணா விரதமும் நாடகம் , அதனால் திமுக மீது சோனியா கசப்பாக உள்ளார் .......

          இது எல்லாம் தயாநிதி மாறன் உதிர்த்த முத்துக்கள். எதிர் கட்சிகள் இதே குற்றச் சாட்டுகளை சொன்னால் ஜாதிய முலாம் பூசும் கலைஞரால் பேரனின் புலம்பல்களுக்கு எதுவும் பதில் சொல்ல முடிய வில்லை.
                              பாவம்    கலைஞர்

7 comments:

 1. நல்ல பதிவு.

  ReplyDelete
 2. கலைஞரை அரசியலை விட்டே துரத்தி அம்மாவை நிரந்த முதல்வர் ஆக்குவோம், ராஜகுரு சோ வழி தமிழ்நாட்டை நடத்தி குஜராத் போல் ராமராஜ்யம் அமைப்போம்

  ReplyDelete
 3. தயாநிதி மாறன் சொன்னவைகளும்,ஊடகங்கள் முன் இவர்கள் காட்டும் பொய் முகங்களும் என்ற இரட்டை நிலை அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

  மேலும் அவரவர் சதுரங்க ஆட்டத்தை கால நேரமறிந்து செய்கிறார்கள் என்பது இந்து ராமின் விக்கிலீக்ஸிலிருந்து தெரிகிறது.

  இந்து ராமிடம் விக்கிலீக்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது தவறெனவும் பக்கசார்பு நிலைகளோடு தேவையான கேபிள்களை மட்டும் வியாபாரம் மற்றும் ராமின் நிலைப்பாடு கருதி இந்து பத்திரிகை வெளியிடும் என நினைக்கிறேன்.தெகல்கா போன்ற பத்திரிகைகள் இன்னும் நடுநிலையோடு விக்கிலீக்ஸ் செய்திருக்கும்.

  கலைஞரின் இந்த சூழலுக்கு சோனியா என்ற பிம்பம் ஏற்பட்டாலும் உண்மை காரணங்கள் ஓரங்க நாடகத்தில் நடிக்கும் அவரும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும்.

  ReplyDelete
 4. Hi, Anony, you also might be killed, as like Modi committed a genocide.

  ReplyDelete
 5. அனானிமஸ் அவர்களே .அப்படியே உங்கள் ராஜ குருவின் கனவுத் திட்டம் குலக் கல்வியை அம்மாவின் ஆட்சியில் அமல்படுத்தலாம். அதற்க்கு முன்னோட்டமாக ச்மச்சீர்க்கல்விக்கு ஆப்பு வைத்து விட்டார்கள். மனுதர்மத்தை அமல் படுத்தலாம். நீங்கள் சூத்திர ஜாதியாய் இருந்தால் உங்கள் குலத்தொழிலை இப்பொழுதே பழகிக்கொள்ளுங்கள் .

  ReplyDelete
 6. //அதற்க்கு முன்னோட்டமாக ச்மச்சீர்க்கல்விக்கு ஆப்பு வைத்து விட்டார்கள். மனுதர்மத்தை அமல் படுத்தலாம். நீங்கள் சூத்திர ஜாதியாய் இருந்தால் உங்கள் குலத்தொழிலை இப்பொழுதே பழகிக்கொள்ளுங்கள் .//
  சமச்சீர் கல்வியை நிறுத்தியதற்க்கும், குலக்கல்விக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? எப்படியெல்லாம் கோத்து விடறாங்க!

  ReplyDelete
 7. கலைஞரும் சரி ஜெயலலிதாவும் சரி ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
  என்பதுதான் எனது அடிப்படையான கருத்து. ஆனால் இந்த ஐந்தாண்டுகளில்
  திமுக ஆட்சிக்காலம் சுய நலத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திருந்ததால் குடும்ப ஆட்சியின் ஆதிக்கம் அளவுக்கு மீறிப் போயிருந்ததால் ஆட்சியையும் இழந்தார். ஜெ ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் அவர் மீதான அச்சத்தையும் அவர் பதவி ஏற்கும் முன்பே எழுதியுள்ளேன்.

  தயாநிதி மாறன் சொன்னதற்கு அனானிகள் ஜெ மீது கோபப்படுவது அனாவசியம்.

  அதே போல் ஹிந்து என்றல்ல எந்த ஒரு ஊடகமும் எந்த ஒரு பிரச்சினையையும் தங்களின் அரசியல் பார்வையில் மட்டுமே அணுகும். அப்படிப்பட்ட அணுகுமுறைதான் இன்றைய சிக்கலே.


  சமச்சீர் கல்வியின் நாயகன் கண்டிப்பாக கலைஞர் அல்ல. மெட்ரிக் பள்ளிகள் விருப்பப்படி தள்ளிப்போடவே கடும் முயற்சி எடுத்தார். மாணவர் சங்கம் போன்ற அமைப்புக்களும் பல கல்வியாளர்களும் நடத்திய போராட்ட
  வரலாறுகளை மறந்து விடக்கூடாது.


  பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி

  ReplyDelete