Saturday, May 21, 2011

சற்று நிதானமாக பாருங்கள் சிதம்பரம் ! உங்கள் பெயரும் இருக்கப்போகிறது.







இந்தியாவில்  தேடப்படும் ஐம்பது   முக்கியக்   குற்றவாளிகள், தீவிரவாதிகள்  பாகிஸ்தானில்  பதுங்கியிருப்பதாக  உள்துறை 
அமைச்சகம் பாகிஸ்தான் அரசிற்கு பட்டியல் ஒன்றை அளித்தது. 
அதிலே  இருவர்  இந்தியாவில்தான் இருப்பதாக  அம்பலமாகி 
விட்டது.  வாசூல் கமார் கான்  தானேவில்    வீட்டில் இருப்பதாகவும் 
ஃ பெரோஸ் அப்துல் ரஷீத் கான் மும்பையின் சிறைச்சாலையில் 
இருப்பதாகவும்  செய்திகள் வந்துவிட்டது. அவைதான்  உண்மையும் 
கூட. 

அண்டை நாட்டுக்கு  அனுப்பிய   ஒரு பட்டியல், அதுவும் தீவிரவாதிகள் 
குறித்த  ஒன்றை  சரியாக தயாரிக்க துப்பில்லாத  உள்துறை அமைச்சகத்தால்   எந்த பணியைத்தான்  ஒழுங்காக செய்ய முடியும்? 

இந்த தவறை  வைத்துக் கொண்டே  பாகிஸ்தான்  நமக்கு ஆட்டம் 
காட்டி விடாதா?  மற்றவர்கள்  கூட எங்கள் நாட்டில்  இல்லை  என்று 
சொல்வதற்கான வாய்ப்பை  பாகிஸ்தானுக்கு  அளித்து  விட்டார்கள். 

தவறுக்கு வருந்துகின்றோம். ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது 
என்று பசி சொல்லி விட்டார். அவர்கள்  இருவரும் தீவிரவாதிகள்,
அவர்களிடம்  மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை  என்று சொல்லி
விட்டார். 

இந்தியாவில் இருப்பவர்களை  பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் 
கூறியதற்கு , தவறான தகவலை  அளித்ததற்கு  இந்திய மக்களிடம் 
கண்டிப்பாக  அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால்  அந்த நேர்மையை  பசி யிடம்  எதிர்பார்க்க முடியாது. 

பசி அவர்களே  அந்த பட்டியலை  நிதானமாக  பாருங்கள். உங்கள் 
அமைச்சகம் உங்கள் பெயரையும்  மன்மோகன், மாண்டேக் சிங் 
பெயர்களையும் செர்த்திருக்கப் போகின்றது.  இந்தியப் 
பொருளாதாரத்தை நாசம் செய்த தீவிரவாதிகள் அல்லவா நீங்கள்? 
 
     

1 comment: