முன்னாள் ராணுவ வீரர், அஞ்சல் துறை ஊழியர், தொழிற்சங்கத் தலைவர், மிகச்சிறந்த எழுத்தாளர், அறிவொளி இயக்க செயற்பாட்டாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராக, தலைவராக, மதிப்புறு தலைவராக செயல்பட்டு அந்த இயக்கத்தின் ஆணிவேராக திகழ்பவர், "திருப்பி அடித்த கதை" என்ற பெயரில் தஞ்சை மாவட்ட செங்கொடி இயக்கத்தின் வரலாற்றை எழுதியுள்ளவர், மகளிர் உரிமைகளுக்காக போராடுபவர், சிறப்பான வகுப்பாசிரியர், இந்தாண்டு சாகித்ய அகாடமி விருதிற்காக ஒரிஜினலாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தோழர் ச.தமிழ் செல்வன்.
அவருடைய முக நூல் பக்கத்தில் இந்த படத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.
ஆம், எங்கள் வேலூர் கோட்டச்சங்கத்தால் வெண்மணி புதிய நினைவகத்திற்கு வழங்கப்பட்ட தியாகிகள் நினைவுச் சின்னத்தின் முன்பாக எடுத்துக் கொண்ட படத்தைத்தான் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அது எங்களுக்கு பெருமையாக உள்ளது.
பிகு: மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிமுகத்தை தோழர் தமிழ்ச்செல்வன் விரும்ப மாட்டார். அவர் விருதுக்கு தேர்வாகியுள்ளார் என்ற செய்தி வெளியானதும் வன்மத்தை அள்ளித்தெளித்த சில வயிற்றெரிச்சல் பேர்வழிகளுக்காக இப்பதிவு.

No comments:
Post a Comment