கோவாவில் ஒரு இரவு விடுதியில் நேற்று நடைபெற்ற தீ விபத்தில் 25 பேர் இறந்து போயுள்ளனர்.
இதனை ஒரு எதிர்பாராத விபத்து என்று கடந்து போய் விட முடியாது.
விடுதியின் உரிமையாளர்கள், கோவா மாநில நிர்வாகம் சேர்ந்து செய்த கொலை என்றுதான் சொல்ல வேண்டும்.
குறுகிய நுழைவாயில், குறுகிய வெளியே செல்லும் வழி என்று இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் உள்ளே சிக்கிக் கொண்டவர்களால் வெளியேற முடியவில்லை. ஆக முதல் குற்றவாளி விடுதியின் உரிமையாளர்.
கழிமுகக் கரையில் (BACK WATERS) அமைக்கப்பட்ட இந்த விடுதி மிகவும் பிரம்மாண்டமானது என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது.
இவ்வளவு பெரிய விடுதிக்கு அனுமதி பெறப்படவில்லை. அளவில் மிகவும் பெரிய இந்த விடுதி செயல்படுவதை அரசு நிர்வாகம் அறிந்திருக்கவில்லை என்றால் அது எத்தனை பொறுப்பற்றதாக இருக்கும்!
அரசு அனுமதி இல்லாமல் ஒரு பிரம்மாண்டமான விடுதி செயல்படுகிறது என்றால் அதற்காக எத்தனை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்திருப்பார்கள்!
ஆக இதில் தொடர்புடைய அத்தனை பேரையும் கொலையாளிகள் என்று கருதியே நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
கோவாவில் உள்ள பாஜக அரசு உறுதியோடு செயல்படுமா?
எனக்கு நம்பிக்கை இல்லை.



No comments:
Post a Comment