பொன் விழா ஆண்டு மாநாடாக புத்தாயிரத்தாண்டில் டிசம்பரில் நடைபெற்றது. இம்மாநாட்டை ஒட்டி குமரியிலிருந்தும் கூடலூரிலிருந்தும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கூடலூரிலிருந்து திருப்பூர் வரைக்கும் பின்பு திருப்பத்தூரிலிருந்து திருத்தணி வரையிலும் பிரச்சாரத்திலும் கலந்து கொண்டேன். தோழர் சீத்தாராம் யெச்சூரி மாநாட்டை துவக்கி வைத்தார். பேரணி பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. எங்கள் கோட்டத்திலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். வேலூரிலிருந்து மட்டும் மூன்று வேன்களில் சென்றிருந்தோம். நான் முதன் முதலில் அகில இந்திய செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது இம்மாநாட்டில்தான்.
அதற்கடுத்த மாநாடு சத்திஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில். மிக நீண்ட பயணம் மேற்கொண்டோம். மாநாடு தொடங்குவதற்கு முதல் நாளே சென்றோம். அது போல ஒரு நாளைக்குப் பிறகே புறப்பட்டோம். அன்றாட ரயில்கள் கிடையாது. வாராந்திர ரயில்கள் மட்டும்தான். முன்னாள் பிரதமர் திரு வி.பி.சிங் கலந்து கொண்ட மாநாடு இது. மறைந்த தோழர் சன்யால் அவர்களின் அஞ்சலி பதிவில் பல விபரங்களை எழுதி இருந்தேன். அதன் இணைப்பு கீழே. கொஞ்சம் படித்து விடுங்களேன்.
இடியாய் தாக்கிய இரட்டைத் துயரம்
இம்மாநாட்டில் தோழர் என்.எம்.சுந்தரம் தலைவராகவும் தோழர் கே.வேணுகோபால் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அகில இந்திய தலைமையகம் சென்னையிலிருந்து ஹைதராபாத் நகருக்கு மாற்றப்பட்டது.
அறிக்கை மீதான விவாதத்தில் நான் பேசியிருக்க வேண்டும். நேரமின்மை காரணமாக அந்த வாய்ப்பு பறிபோனது.
அறிக்கை மீதான விவாதத்தில் ஒடிஷாவின் சம்பல்பூர் கோட்டத்தின் அமைப்புச் செயலாளராக இருந்த ஒரு இளம் தோழர் ஒரு கலக்கு கலக்கினார்.
அவர்தான் இன்றைய அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா.
எங்கள் கோட்டக்குழுவின் இடம் பெற்று எங்களை உற்சாகப்படுத்திய (அதாவது ஓட்டுவதற்கு கண்டெண்ட் கொடுத்து) தோழர்கள் ஆர்.சிவகுமார், கே.ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் இப்போது இல்லாதது ஒரு துயரம்.
மிகவும் சிறப்பாக நடைபெற்ற மாநாடு. வரவேற்புக்குழுவின் செயலாளராக செயல்பட்டவர், இந்தியாவின் முதல் பெண் கோட்டப் பொதுச்செயலாளர், பெங்களூர் கோட்டம் 1 ன் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.கே.கீதா.
சுனாமியில் தந்தையை இழந்த பாக்கியலட்சுமி என்ற பெண்ணின் கல்விக்காக நாங்கள் தயாரித்திருந்த சுனாமி நிவாரணப் பணிகள் குறித்த காணொளியை தோழர் என்.எம்.எஸ் வெளியிட தோழர் கே.வேணுகோபால் பெற்றுக் கொண்டார். அரங்கில் அது பின்னர் ஒளிபரப்பானது. அந்த பெண்ணின் கல்விக்காக மூத்த தலைவர் தோழர் சந்திரசேகர் போஸ் எங்களை தேடி வந்து ரூபாய் 500 கொடுத்த போது மிகவும் பெருமையாக இருந்தது.
இம்மாநாட்டின் தீர்மானக்குழுவில் நான் இடம் பெற்று சில தீர்மானங்களை முன் மொழியும் வாய்ப்பு கிடைத்தது.
.jpg)
.jpg)





No comments:
Post a Comment