Wednesday, December 3, 2025

கோயிலை இடித்ததா பாஜக அரசு?

 


சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் செய்தி ஒன்று.

புது டெல்லியில் உள்ள 1500 ஆண்டு பழமையான கோரக்நாதர் கோயிலை டெல்லி பாஜக அரசு இடித்து விட்டதாகத்தான் அந்த செய்தி சொல்கிறது.

அந்த கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு வாகன நிறுத்தமிடம் வேண்டுமென்பதற்காக கோயில் இடிக்கப்பட்டதற்காகவும் அந்த செய்தி சொல்கிறது.

முக்கிய ஊடகங்கள் எதுவும் இதைப் பற்றி வாய் திறக்கவே இல்லை.

ஏன்?

பாஜகவின் போலித்தனத்தை அம்பலப்படுத்த அச்சமா?

செய்தி வதந்தி என்றால் அதை ஏன் சொல்லவில்லை?

என்னமோ நடக்குது . . .மர்மமா இருக்குது . . .


பிகு: கோரக்நாதர் என்பவர் சிவனின் சிஷ்யர்களின் ஒருவர், சித்தர், முனிவர் என்று சொல்கிறார்கள். அவருக்கான முக்கியமான கோயில் உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருக்கிறது. உபி முதல்வர் மொட்டைச்சாமியார்தான் அந்த கோயிலின் தலைமைப் பூசாரி. 

No comments:

Post a Comment