Tuesday, December 2, 2025

ராஜ்பவனிலிருந்து ரெவியே வெளியேறு

 


ராஜ் பவன் என்ற பெயர் ஏதோ முடியரசு ஆட்சி போன்ற தோற்றத்தை உருவாக்குவதால் அதன் பெயரை லோக் பவன், அதாவது மக்கள் பவன் என்று மாற்ற வேண்டும் என்று ஆட்டுத்தாடிகளுக்கான கூட்டத்தில் ஆரெஸெஸ் ரெவி சொன்னாராம். மோடி அரசு அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாம்.

இந்த படத்தில் பார்ப்பதுதான் சென்னையில் உள்ள ராஜ் பவன், தற்போது 156 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. கட்டிடத்தின் அளவு  என்ன? எத்தனை அறைகள் இருக்கிறது என்றெல்லாம் இணையத்தில் தேடிய போது கிடைக்கவில்லை. 

தரைக்குக் கீழே ஒரு தளம் அமைக்கப்பட்டிருந்த தளம் 15,000 சதுர அடியில் 13 அறைகள் உள்ளதாக மட்டும் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பிரம்மாண்டமான மாளிகைக்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

மக்கள் அங்கே சென்று சுற்றிப் பார்க்க முடியுமா? உள்ளே நுழையத்தான் முடியுமா?

மக்களை அப்பால் நிறுத்தி வைத்து விட்டு பின்பு எதற்கு மக்கள் பவன் என்று பெயர் வைக்க வேண்டும்?

இப்படிப்பட்ட மாளிகை ஒரு ஆட்டுத்தாடிக்கு எதற்கு அவசியம்?

ஆட்டுத்தாடி எனும் பதவியில் இருப்பவர்கள் எல்லாம் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மத்தியரசின் உளவாளிகள், சதிகாரர்கள்.

அவர்கள் சொகுசாக தங்குவதற்கான செலவினங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியது என்னமோ மாநில அரசுகள்.

பெயர் மாற்றுவது முக்கியமில்லை. ஆளுனர்  என்ற பதவியில் உட்கார்ந்து கொண்டு மாநில மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுனர்களை ராஜ்பவனிலிருந்து துரத்தி அந்த பிரம்மாண்டமான மாளிகையிலிருந்து வெளியேற்றுவதுதான் முக்கிய்ஸ்ம். 

எனவே ஆரெஸெஸ் ரெவியே வெளியேறு.


No comments:

Post a Comment