டெல்லி தேர்தலில் பாஜக வென்றுள்ளது. வழக்கமான மோசடி வேலைகள், ஜூம்லாக்கள், வெறுப்பு மற்றும் பொய்ப்பிரச்சாரம் இவற்றையும் தாண்டி பாஜக வெல்ல ஒரு முக்கியக்காரணம் இந்தியா கூட்டணியின் ஒற்றுமையின்மை.
ஆணவமும் முட்டாள்தனமும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் என இரு கட்சிகளையுமே ஆட்கொண்டதன் விளைவு.
கடந்த சில வருடங்களாகவே ஆம் ஆத்மி அரசுக்கு எண்ணற்ற இடைஞ்சல்கள்,
கேஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு ஊழல் பேர்வழிகள் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது.
மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஏழு தொகுதிகளிலும் பாஜக வென்றது.
இதை விட முக்கியமாக பாஜகவின் முக்கியக் கூட்டாளி தேர்தல் ஆணையம்.
இவையெல்லாம் தெரிந்திருந்தும் தனித்து போட்டியிட்டதை ஆணவம் என்றோ முட்டாள்தனம் என்றோதான் குறிப்பிட முடியும்.
அந்த மூடத்தனத்தின் விளைவை கீழேயுள்ள புள்ளி விபரம் சொல்லும்.
கட்சி வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்கு சதவிகிதம்
பாஜக 48 47.2 %
ஆம்ஆத்மி 22 43.6 %
காங்கிரஸ் 0 6.3 %
மற்றவர்கள் 0 2.9 %
ஆக வழக்கம் போல பாஜக எதிர்ப்பு வாக்குகள்தான் அதிகம். அவை சிதறுண்டதால் வழக்கம் போல பாஜக வென்று விட்டது. அவ்வளவுதான்.
No comments:
Post a Comment