Thursday, February 6, 2025

கிறுக்கன் ட்ரம்பின் விபரீதத் திட்டம்

 

அமெரிக்க ஜனாதிபதி  பாலஸ்தீனப் பிரச்சினை தொடர்பாக நேற்று அறிவித்த திட்டம் கொடுமையானது.

 பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காஸா திட்டில் உள்ள பாலஸ்தீனர்கள் அனைவரையும் முற்றிலுமாக அங்கிருந்து அகற்றி பக்கத்தில் உள்ள நாடுகளில் மறு குடியமர்வு செய்து விடுவர்களாம்,

எந்த நாடுகளில்  பாலஸ்தீனர்கள் குடியமர்த்தப்படுவார்கள்?

அதெல்லாம் அவர்கள் பிரச்சினை. அமெரிக்கா காஸாவிற்குள் வருகையில் பாலஸ்தீனர்கள் வெளியேறி விட வேண்டும். அல்லது வெளியேற்றப் படுவார்கள். கை,கால்களில் விலங்கு அணிவிக்கப்பட்டா என்பதை பின்பு முடிவு செய்வார்கள்.

அங்கே அமெரிக்கா என்ன செய்யும்?

அந்த இடத்தை அமெரிக்க எடுத்துக் கொண்டு விடுமாம். அங்கேயுள்ள சிதைபாடுகள், வெடிக்காத குண்டுகளை அகற்றி தூய்மைப்படுத்தி மக்கள் வாழ்வதற்கான இடமாக மாற்றி விடுமாம்.

அப்படி செய்தபின்பு அண்டை நாடுகளில் குடியமர்த்தப் பட்ட பாலஸ்தீனர்கள் நாடு திரும்பலாமா?

அதெல்லாம்  முடியாது.

பின்பு?

காஸா திட்டை உலக மக்கள் வசிக்கும் பகுதியாக அமெரிக்க மாற்றி விடுமாம்.        அது அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருக்குமாம்.

யூதர்கள் தந்திரமாக உள்ளே வந்து இஸ்ரேலும் எனும் நாட்டை உருவாக்கி பாலஸ்தீனர்களை மேற்குக் கரை மற்றும் காஸா திட்டு ஆகிய பகுதிகளுக்கு விரட்டி விட்டார்கள். அதிலே மேற்குக்கரையின் பெரும் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து விட்டது. எஞ்சியுள்ள காஸா திட்டு பகுதியிலிருந்தும் அவர்களை அப்புறப்படுத்தி பால்ஸ்தீனர்களை அவர்களது மண்ணிலிருந்து முற்றிலுமாக அகற்றுவது என்பதுதான் ட்ரம்பின் திட்டம்.

இதனை நிராகரிப்பதாக ஹமாஸ் அறிவித்து விட்டது. ஆஸ்திரேலியா போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகள் சிலவும் இதனை ஏற்கவில்லை.

இஸ்ரேல் பிரதமரான போர்க்குற்றவாளி நெதன்யாகு ட்ரம்பின் திட்டத்தை வரவேற்றுள்ளதே இது பாலஸ்தீனர்களுக்கு எதிரான விபரீதத் திட்டம் என்பதற்கான சான்று.

இது நடக்காது என்று நம்மால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் ட்ரம்ப் வானளாவிய அதிகாரங்களை குவித்து வைத்துள்ள கிறுக்கன். பைத்தியங்கள் என்ன செய்யும் என்பதை யாரால் கணிக்க இயலும்!

No comments:

Post a Comment