Wednesday, February 12, 2025

யாருக்கு தர்ப்பணம் செய்தீர் மோடி?

 


அலகாபாத்தில் மோடி கங்கையில் குளித்து தண்ணீரை தாரை வார்க்கும் புகைப்படத்தை பார்த்தவுடன் எனக்கு "காதலன்" படக் காட்சிதான் நினைவுக்கு வந்தது.

தன்னுடைய அடியாள் ரகுவரண் மூலம் கொல்லப்பட்டவர்களுக்கு காசியில் பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்வார் தமிழ்நாட்டின் ஆட்டுத்தாடியாக நடித்த கிரீஷ் கர்னார்ட்.

அது போல மோடி யாருக்காவது தர்ப்பணம் செய்திருப்பாரா?

குஜராத்தில் இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்கள்,

குஜராத்தில் சரிந்து வந்த செல்வாக்கை மீட்க போலி எண்கவுண்டர்கள் மூலம் கொல்லப்பட்டவர்கள்.

மாற்றுக்கருத்து கொண்டமையால் கொல்லப்பட்ட குஜராத் உள்துறை அமைச்சர் ஹிரேன் பாண்டியா,

செல்லா நோட்டு விவகாரத்தில் வங்கி வரிசையில் நின்றே செத்துப் போன நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்.

மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று அடித்துக் கொல்லப்பட்ட முகமது அக்லக் உள்ளிட்ட ஏராளமானவர்கள். 

உளவு அறிக்கை இருந்தும் தேர்தல் ஆதாயத்திற்காக அதனை அலட்சியப்படுத்தியதால் புல்வாமாவில்  மாண்டு போன  மத்திய ரிசர்வ் படை வீரர்கள்.

இப்படி பெரிய பட்டியலே உள்ளது மோடியின் கையில் படிந்துள்ள ரத்தக்கறைக்கு காரணமாக. . .

இவர்களில் யாருக்காவது தர்ப்பணம் செய்தீரா மோடி?

1 comment:

  1. எல்லாம் ஒரு நடிப்பு தான். இந்திய மக்களை மேலும் முட்டாள்களாக ஆக்கவும் மதவெறியை மேலும் தூண்டுவதற்குத்தான்.

    ReplyDelete