மேலேயுள்ள கார்ட்டூனுக்காக ஆனந்த விகடனின் இணையதளத்தை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. அநேகமாக படத்தை வரைந்தவர் கைது செய்யப்படலாம்.
ஆமாம். அந்த கார்ட்டூனில் என்ன தவறு இருக்கிறது?
இந்தியர்கள் அவர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்களாகவே இருந்தாலும் கை காலில் விலங்கு மாட்டி அனுப்பியதை அமெரிக்காவிடம் கேள்வி கேட்க துப்பில்லாத மோடி, அங்கே நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ட்ரம்பால் அசிங்கப்படுத்தப்பட்டார். ட்ரம்பின் அனைத்து கட்டளைகளுக்கும் அடி பணிந்து "நான் உங்கள் அடிமை ஹூஸூர்" என்று இந்தியாவின் மானத்தை கப்பலேற்றிய நபர் மோடி.
இதற்கு அசிங்கப்படாத, வெட்கப்படாத சங்கிகளுக்கு கார்ட்டூனைப் பார்த்ததற்கு மட்டும் கோபம் வருகிறது.
அதனால் இணையத்தை முடக்கி விட்டார்கள்.
ஆனால் சங்கி முட்டாள்களுக்கு மட்டும் ஒரு உண்மை புரியவில்லை.
அவர்கள் கொடுத்த விளம்பரத்தால்தான் மோடி விலங்கோடு உள்ள படம் பல மடங்கு வேகமாக உலகெங்கும் பரவும் என்பதையும்
இது போல எம்.ஜி.ஆர் காலத்தில் வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைத்து பி.ஹெச்.பாண்டியன் விகடன் ஆசிரியரை கைது செய்ய பின்பு நீதிமன்றத்தால் குட்டுப்பட்டு இழப்பீடு கொடுத்த வரலாற்றையும்
எடுபிடி எடப்பாடி முடக்க நினைத்த அந்த படம்தான் இன்று ஸ்டெரிலைட் துப்பாக்கிச்சூட்டின் அடையாளமாக திகழ்கிறது என்பதையும்
மறந்து விட்டார்கள்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி வேலை செய்யாது என்பார்கள்.
இவர்களோ மூடர்கள், இவர்களுக்கு கோபம் வந்தால் ஆயிரம் மடங்கு முட்டாள்தனமாகத்தானே செயல்படுவார்கள்!
இதை ரெட் லைட் மீடியா சொல்லுது
ReplyDeleteAre you the pimp for them?
Delete