பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய பதக்கப்பட்டியலை போணி செய்தவர் ஹரியானாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் மனு பாக்கர். அவர் பெற்ற வெண்கல பதக்கமே இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம். அவர் இன்னொரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
அப்போது மோடி அந்த இளம் பெண்ணோடு வீடியோ காலெல்லாம் பேசி அதை ட்விட்டரில் எல்லாம் பகிர்ந்து கொண்டு சீன் போட்டார். அவர் பகவத் கீதை பற்றி குறிப்பிட்டார். அதனால் இந்துத்தவ பெண் என்று சங்கிகளும் சீன் போட்டார்கள்.
இந்திய அரசின் இளைஞர் நலத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் அந்த குறிப்பிட்ட ஆண்டில் விளையாட்டுத்துறையில் சாதனை செய்த இளைஞர்களுக்கு கேல்ரத்னா விருது கொடுக்கும். 25 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் அடங்கியது இந்த விருது.
1991ல் நரசிம்மராவ் அரசால் ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது என்று அறிவிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட விருதின் பெயரில் மோடி அரசு ராஜீவ்காந்தியின் பெயரை அகற்றி தயான்சந்த் கேல்ரத்னா விருது என்று மாற்றி விட்டார்கள் என்பது தனிக்கதை.
இப்போதைய பிரச்சினைக்கு வருகிறேன்.
இந்த வருட கேல் ரத்னா விருதுப் பட்டியலில் மனு பாக்கரின் பெயர் இடம் பெறவில்லை. அவர் விண்ணப்பிக்கவில்லை என்று அமைச்சகம் காரணம் சொன்னது. “நான் உரிய முறையில்தான் விண்ணப்பித்தேன். பிச்சை எடுத்தால்தான் விருது கிடைக்கும் என்றால் எதற்கு பதக்கங்களை வெல்ல வேண்டும்” என்று அவரின் அப்பா கோபமாக கேட்டுள்ளார்,
பின் என்ன காரணம்?
ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு அவர் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது ஒன்று போதாதா? அற்பர்கள் அரசு அற்பத்தனமாக முடிவெடுத்து விட்டது.
கடைசிச் செய்தி
நான் விண்ணப்பித்த முறையில் ஏதாவது தவறு இருக்கலாம். அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்று மனு பாக்கர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த அரசினை முறைத்துக் கொண்டால் தன் எதிர்காலம் என்னவாகும் என்பதை அறியாதவரா அவர்! வினேஷ் போகத் பதக்கம் வெல்ல முடியாமல் நடந்த சதி பற்றி அவருக்கும் தெரிந்திருக்குமல்லவா!
ஒரு கேள்வி
ஒரு
சாதனையாளர் தனக்கு விருது வேண்டுமென்று அவர்தான் விண்ணப்பிக்க வேண்டுமா? அந்த வேலையைக்கூட
தானாக செய்ய முடியவில்லை என்றால் பின் என்ன எழவுக்கு ஒரு அமைச்சகம், அமைச்சர் மற்றும்
அரசு?
No comments:
Post a Comment