நேற்று முன் தினம், நாடாளுமன்றத்தில் நிர்மலா அம்மையார் உதிர்த்த முத்து கீழே .. .
இவர் சொல்வது எவ்வளவு பெரிய பொய் என்பதை ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அம்பலப் படுத்தி உள்ளார்.
பொய் சொல்லக் கூடாது பாப்பா
தமிழ்நாட்டில் இந்தி படிப்பவர்கள் கேலி செய்யப்பட்டனரென ஒரு பச்சைப் பொய்யை நாடாளுமன்றத்தில் அவிழ்த்து விட்டிருக்கிறார் நி சீ.
முன்பு ஒரு முறை தமிழ்நாட்டில் தான் இந்தி படிக்க அனுமதிக்கப்படவில்லை என்று பொய் சொன்னார் இவர்.
அவர் திருச்சி சீத்தாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்த அதே ஆண்டுகளில்தான் என் சகோதரி பத்மகுமாரியும் படித்தார். அவருக்கு இரண்டாம் மொழிப்பாடம் இந்தி. அதற்கு ஒரு உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இதை நான் முன்பே பதிவு செய்திருக்கிறேன். என் பதிவைக் குறிப்பிட்டு கனிமொழி அவர்கள் கூட நானும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பேசினார்.
இன்று X தளத்தில் இது குறித்து செய்த பதிவை சிலர் நி சீயை Tag செய்து பகிர்ந்திருக்கிறார்கள்.
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது என்று நினைத்தேன். ஆனால் அது மரத்திலிருந்து இறங்கவே இல்லை என்பதுதான் உண்மை.
நானும் என்னுடைய அனுபவத்தை சொல்ல விரும்புகிறேன்.
நான் ஆறாவதிலிருந்து எட்டாவது வரை படித்த காரைக்குடி டாக்டர் அழகப்பச் செட்டியார் மாதிரி மேல் நிலைப்பள்ளியிலும் சரி, ஒன்பதாவதிலிருந்து பனிரெண்டாவது வரை படித்த தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, சர் சிவசாமி ஐயர் மேல் நிலைப்பள்ளியிலும் சரி, இந்தி பிரச்சார சபாவின் தேர்வுகள் எழுத சிறப்பு வகுப்புக்கள் அன்றாடம் எடுக்கப்படும். புத்தகங்கள் இலவசம். நிறைய மாணவர்கள் சேர்ந்து படிப்பார்கள்.
நானும் கூட பிராத்மிக், மத்யமா தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளேன். அதற்கு மேல் இந்தி தலையில் ஏறவில்லை.
அது மட்டுமல்ல, எங்கள் பள்ளியில் *2 வில் தமிழுடன் மொழிப்பாடமாக சமஸ்கிருதமும் உண்டு. சமஸ்கிருதத்திற்கு மதிப்பெண்கள் வாரி வழங்குவார்கள் என்பதால் குறைந்தபட்சம் 30 % மாணவர்களாவது சமஸ்கிருதத்தில் சேர்வார்கள். என் சகோதரி அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியதால் நிறைய ஆசிரியர்கள் என்னை சமஸ்கிருதத்தில் சேரச் சொன்னார்கள். என் அக்காவின் நண்பரான சமஸ்கிருத ஆசிரியையும் மிகவும் வலியுறுத்தினார். ஆனால் என் தமிழ் ஆர்வம் காரணமாக நான் தமிழ் மொழிப்பாடத்தைத் தான் தேர்ந்தெடுத்தேன்.
ஆக, இந்தியோ, சமஸ்கிருதமோ விருப்பத்தின் பேரில் கற்பதற்கு தமிழ்நாட்டில் எந்த தடையும் கிடையாது.
தமிழ்நாடு இந்தி திணிப்பிற்கு எதிரானதே தவிர இந்திக்கு எதிரானது கிடையாது.
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாது என்பார்கள். ஆனால் இந்த அம்மையாரோ அமைச்சராகவே இருக்கிறார்.
இதில் ஆச்சர்யப்படவோ, அதிர்ச்சியடையவோ ஏதுமில்லை.
மகா பொய்யன் மோடியின் அமைச்சராக பொய்யர்கள்தான் இருப்பார்களே தவிர அரிச்சந்திரர்களா இருக்க முடியும்!
ஒன்றிய அமைச்சரவை வரிசையில் நான்காவது இடத்தில் அமர்ந்து கொண்டு இப்படி ____________தரமாக பேசக்கூடாது.
ReplyDeleteதிருச்சி ஈ ஆர் உயர் நிலைப்பள்ளியில் சமஸ்கிருதம் எடுத்து படித்தேன் திமுக காரராக இருந்தும் என் தந்தை இதை படிக்க அனுமதித்தார், என் வகுப்பு (பள்ளி) மாணவர்கள் பலர் இந்தி வகுப்புகளில் படித்தனர்
ReplyDelete