இது கைலாயக் காட்சிகள்
சிவன் : நாரதர் புதிதாக ஒரு ஞானப்பழத்தை கொண்டு வந்துள்ளார். முந்தைய ஞானப்பழம் முருகனுக்கு போனதால் இந்த புதிய மாம்பழத்தை கணபதியின் மகனுக்கு தரப் போகிறேன்.
முருகன் : தந்தையே இது என்ன அநியாயம்?
சிவன் : இதில் என்ன அநியாயத்தை கண்டாய்?
முருகன் : புதிய ஞானப்பழத்தை பழைய மாம்பழத்தை பெற்ற என்னுடைய வாரிசுக்குத்தான் தர வேண்டுமே தவிர, கணபதியின் வாரிசுக்கு அல்ல.
கணபதி : மறுபடியும் மறுபடியும் உனக்கும் உன் வாரிசுக்கும்தான் ஞானப்பழம் என்றால் நாங்கள் எல்லாம் மாம்பழத்தின் கொட்டையை வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டுமா?
சிவன் : எதற்கு வீண் பேச்சு! நாந்தான் கைலாசத்தை உருவாக்கினேன். யாருக்கு எதை தர வேண்டும் என்பதை நாந்தான் முடிவு செய்வேன். இருக்க இஷ்டம் இருக்கறவங்க மட்டும் இங்க இருங்க . ..
முருகன் : என் வாரிசுக்கு மாம்பழம் தராத இந்த கைலாயத்தில் எனக்கு இனிமேல் என்ன வேலை? நான் பனையூருக்கு சென்று புதிய கைலாயத்தை உருவாக்குகிறேன். என்னை ஆதரிப்பவர்கள் அங்கே வாருங்கள்.
பிகு 1 : என்ன விஷயம் என்று நிஜமாகவே தெரியாதவர்கள், கீழே உள்ளதை பாருங்கள்.
பிகு 2 : இதை வைத்து இன்னொரு காட்சி கூட மனதில் உருவாகியுள்ளது. அதுதான் அடுத்த பதிவு.
No comments:
Post a Comment