இயற்கை
பேரிட நிதியாக ஒவ்வொரு வருடமும் மத்தியரசு அம்மாநிலங்கள் வசூலித்து கொடுத்த நிதியில்
ஒரு பங்கை அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டுக்கு இந்த வருடம் அனுப்ப வேண்டிய தொகையை இன்னும்
அனுப்பவில்லை என்பது ஒரு செய்தி.
கேரளாவிற்கான
இந்தாண்டிற்கான தொகை ரூபாய் 250 கோடி அனுப்பியுள்ளது. அதிலே 149 கோடி ரூபாயை பிடித்துக்
கொண்டு அனுப்பியுள்ளது.
எதற்காக
பிடித்தம்?
வயநாடு
நிலச்சரிவு நினைவில் உள்ளதல்லவா?
அப்போது
மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபட்டதற்கான கட்டணமாம் அந்த 149 கோடி ரூபாய்.
இதே
போலத்தான் கேரள பெருமழையின் போதும் மத்தியரசு செய்தது.
ராணுவம்
மக்களுக்கானதுதானே! அனைத்து இந்தியர்களுக்குமானதுதானே!
ராணுவத்திற்கான
பட்ஜெட் அனைத்து மாநில மக்களும் கொடுக்கும் வரியிலிருந்துதானே போடப்படுகிறது.
அப்படி
இருக்கையில் கட்டணம் வாங்கிக் கொண்டு மீட்புப் பணி செய்ய அது ராணுவமா இல்லை கூலிப்படை
அமைப்பா?
ராணுவ
வீரர்களின் சேவைக்கு கட்டணம் விதித்து அவர்களின் உழைப்பை கொச்சைப்படுத்தும் மத்தியரசு,
தான் பெற்ற கட்டணத்தொகையை மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு பிரித்து
தருமா?
இந்த
கட்டணைத்தை வசூலிக்கத்தான் கேரளாவிற்கு பேரிடர் நிதியையே வழங்கியுள்ளார் கந்து வட்டிக்காரனை விட மோசமான குணம் கொண்ட நிர்மலா அம்மையார்.
No comments:
Post a Comment