இன்று மாலை ஏழு மணி அளவில் அலைபேசிக்கு 87060981601 என்ற எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. பதினோரு எண்கள் இருந்ததால் அந்த அழைப்பை ஏற்கவில்லை. ட்ரூ காலரில் பார்த்தால் Pitcairn Islands என்று சொன்னது. யார் அங்கிருந்து அழைத்திருப்பார்கள்? எதற்காக?
அடுத்த அரை மணி நேரத்தில் 8706697765 என்ற எண்ணிலிருந்து அழைப்பு. வாரங்கல் லேண்ட்லைன் என்று சொன்னது ட்ரூ காலர்.
வாரங்கல் கோட்டத் தோழர் யாராவது சி.எம்.சி பற்றி விசாரிக்க கூப்பிடுகிறார்கள் என்று நினைத்து எடுத்தால் ஒரு இயந்திரக் குரல் " TRAI லிருந்து அழைக்கிறோம். நீ அலைபேசியை அளவுக்கதிகமாக பயன்படுத்தியதால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் உன் சேவை முடக்கப் போகிறோம். அதை தவிர்க்க எண் ஒன்றை அழுத்தவும்" என்றது.
எண் ஒன்றை அழுத்தாமல் அழைப்பை துண்டித்தேன். இரண்டு அழைப்புக்களும் ஒரே நபரிடமிருந்தா அல்லது வேறு வேறு ஆட்களா?
தொலைபேசியை வைத்து ஏதோ புதிய மோசடி ஒன்று துவங்கி உள்ளது என்பது மட்டும் புரிகிறது.
பிகு: மேலே உள்ள படங்கள்தான் Pitcairn Islands. தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள எரிமலைகள் அடங்கிய தீவு. பிரிட்டிஷின் கட்டுப்பாட்டில் உள்ளது. தகவலும் படங்களும் கூகிள் உபயம்.
Useful and alert giving matter
ReplyDelete