Saturday, December 7, 2024

உமக்கு ஏன் எரியுது சுமந்து?

 


சங்கித் தரகர் சுமந்து ராமனின் ட்விட்டர் பதிவு கீழே.


 

போராட்டம் என்றாலே சங்கி சுமந்துக்கு அடி வயிறு எரிகிறது. ஐ.டி விங் போடும் எலும்புத்துண்டுகளாக பதிவுகள் போடும், ஏழு கழுதை வயசான சுமந்திற்கு போராட்டத்தின்  முக்கியத்துவம் குறித்தெல்லாம் உபதேசிப்பது நேர விரயம். எண்ணற்ற உயிரணுக்களில் ஒரு அணுவின் போராட்டத்தின் வெற்றிதான் சுமந்தின் பிறப்பிற்கு காரணமானது என்பது கூட தெரியாத டாக்டரா அவரா?

 அப்புறம் காம்ரேடுகளை நக்கலடித்துள்ள சுமந்துக்கு ஒன்று  சொல்ல வேண்டும்.

 நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் வேண்டுமானால் இடதுசாரிக் கட்சிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். ஆனால் மக்களின் பிரச்சினைகளுக்காக தெருவில் இறங்கி போராடும் வலிமையோ என்றைக்கும் குறைந்ததில்லை. அவர்களின் போராட்ட உணர்வு எப்போதும் போல உறுதியாகவும் உயிர்ப்போடுதான் இருக்கிறது.

 காவிக்கண்ணாடி அணிந்ததால் சுமந்தின் மூளைத் திறன் குறைந்தது போல பார்வைத்திறனும் குறைந்து விட்டது போல. . . .

 

பிகு: எழுதி நாளான பதிவுதான் . . . இன்று, நாளை, நாளை மறுநாள் என  மூன்று நாட்கள் சென்னையில் எங்கள் சங்கத்தின்  அகில இந்திய செயற்குழுக் கூட்டம். அதனால்  ஏற்கனவே எழுதி பிரசுரிக்காமல் இருந்த பதிவுகளுக்கு இப்போது விமோசனம் கிடைக்கும்.

No comments:

Post a Comment