ஸ்ரீவில்லிப்பூத்தூர் கோயிலில் இளையராஜாவுக்கு அவமதிப்பு நடந்துள்ளது.
இளையராஜா இசை ஞானியாக இருக்கலாம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரப்பந்தத்திற்கு இசை வடிவம் கொடுத்திருக்கலாம். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் எழுதிய திருப்பாவையின் முதல் பாடலுக்கு உள்ளத்தை உருக்கும்படி மெட்டமைத்திருக்கலாம். ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தின் ஒரு நிலையை கட்ட பணம் வசூலித்துக் கொடுத்திருக்கலாம். இன்னும் சில தினங்களில் முதல் ஆசியராக தன் சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றலாம். மோடியை அண்ணல் அம்பேத்கரோடு ஒப்பிட்டிருக்கலாம். அதனால் மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் இருக்கலாம்.
எதுவாக இருப்பினும் கருவறை கூட அல்ல, அதற்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்திற்குள்ளே கூட நுழைய அவர் அனுமதிக்கப்படவில்லை.
தனக்கு நிகழ்ந்ததை அவமதிப்பு என்று கருதாமல் அர்த்த மண்டபத்திற்கு வெளியே அளிக்கப்பட்ட மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். நடந்தது பற்றிய செய்தி வதந்தி என்றும் தன் சுய மரியாதை பாதிக்கப்படவில்லை என்றும் அவரை சொல்ல வைத்துள்ளது.
அப்படி அவரது மனதை ட்யூன் செய்து வைத்துள்ளதுதான் சனாதனத்தின் வெ(ற்)றி.
அதனால்தான் அதனை எதிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment