மத்யமர் ஆட்டுக்காரன் குழு – ஆட்டம் ஆரம்பம்
மூன்றாவது இடை நீக்கமும் முடிந்து இன்று திரும்பியுள்ளேன். சில அபத்தமான பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதைத் தவிர பெரும்பாலும் பார்வையாளராகத்தான் இருந்துள்ளேன்.
பின் ஏன் மூன்று முறை இடை நீக்கம்?
விடுதலைப் போராட்ட வீரரும் நூற்றாண்டு கண்ட மூத்த பொதுவுடமை இயக்கத்தலைவர் தோழர் என்.சங்கரய்யா
அவர்களை கொச்சைப்படுத்திய பதிவை கண்டித்தமைக்காக முதல் முறை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியை அவதூறு செய்த ஒரே செய்தியைக் கொண்டு நான்கு பதிவுகளை எப்படி அனுமதித்தீர்கள் என்று கேட்டதற்கு மாடரேட்டர் கொடுத்த பதிலின் அபத்தத்தை சுட்டிக் காட்டியமைக்கு இரண்டாம் முறை.
பகுத்தறிவாளர்களின் பிணங்களை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்ற அறிவார்ந்த பதிவை அனுமதித்த மேதமையை சுட்டிக்காட்டியமைக்கு மூன்றாவது இடை நீக்கம்.
மாடரேட்டர் தான் நடுநிலையானவர் என்ற தோற்றத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சித்தாலும் அவரது சகிப்புத்தன்மையற்ற நிலை அவ்வப்போது அம்பலமாகிறது.
எந்த தனிநபரையும் அவதூறு செய்யக்கூடாது என்ற குழுவின் விதி அவருக்கு மட்டும் பொருந்தாதா என்ற கேள்வியை இங்கே எழுப்புகிறேன்.
இக்குழுவின் அட்மின் திரு ஷங்கர் ராஜரத்தினமே ஒரு திராவிடக் கொத்தடிமை, இந்த குழுவின் அட்மினாக இருக்க தகுதியற்றவர் என்றெல்லாம் வசை பாடப்பட்ட போது நானெல்லாம் எம்மாத்திரம்!
இப்பதிவை அனுமதிக்காவிட்டாலும் எனக்கு கவலையில்லை. இங்கே காணப்படும் முரண்பாடுகளை அம்பலப்படுத்திக் கொண்டே இருப்பேன்.
நான் எதிர்பார்த்தபடி அந்த பதிவை நிராகரித்து விட்டார் அந்த நடுநிலை மாடரேட்டர். தரக்குறைவான பதில்கள் காரணமாகவே இடை நீக்கம் செய்யப் பட்டதாக காரணம் வேறு.
அப்படி
என்ன தரக்குறைவான பதில்கள்.
தரமற்ற பதிவுகளை அனுமதிப்பார்கள். பெருமை மிகு தலைவர்களை அவதூறு செய்வார்கள். அது நியாயமா என்று கேட்டால், பதிவை விட மோசமாக முட்டு கொடுப்பார்கள். இதை தட்டிக் கேட்டால் இடை நீக்கம் செய்வார்கள்.
வாழ்க உங்கள் நீதி, நேர்மை, நாணயம்.
இந்த பதிவையும் வழக்கம் போல நிராகரிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அது
பிரசுரிக்கப்படவும் இல்லை, நிராகரிக்க்கப் படவும் இல்லை. நிலுவையிலும் இல்லை. சத்தமில்லாமல்
நீக்கி விட்டார்கள். இதுதான் அவர்களின் தரம்.
No comments:
Post a Comment