Wednesday, December 4, 2024

பீஹார், குஜராத் ஆகிறதா தமிழ்நாடு?

 


வழக்கமாக பீகாரிலும் குஜராத்திலும் கட்டப்பட்ட சில நாட்களுக்கு உள்ளாகவே பாலம் இடிந்து விழும். சமீபத்தில் விழுந்த அப்படிப்பட்ட சில பாலங்களை மோடிதான் திறந்து வைத்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இப்போது தமிழ்நாட்டிலும் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தென் பெண்ணை ஆற்றின் நடுவே, கட்டப்பட்ட ஒரு பாலம் செப்டம்பர் 2024 ல்தான் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 16 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அந்த பாலம் சமீபத்திய வெள்ளத்தில் இடிந்து விட்டது,

மூன்று மாதம் கூட அந்த பாலம் தாங்கவில்லையென்றால் அந்த பாலம் எப்படிப்பட்ட தரத்தில் கட்டப்பட்டிருக்கும்?

பாலத்திற்கு டெண்டர் எடுப்பது தொடங்கி இறுதி பில்லுக்கு பணம் வாங்கும் வரை அந்த ஒப்பந்ததாரர் எவ்வளவு பணம் கொடுத்திருப்பார்? அந்த பணம் எல்லாம்தான் இடிந்த பாலத்தின் கீழ் தண்ணீரில் ஓடி விட்டது.

 வெறும் வாயை மென்று கொண்டிருந்த ஆட்டுக்காரன் வகையறா சங்கிகளுக்கு அவல் கொடுத்து விட்டது திமுக அரசு.

 பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரர், அவரிடம் கை நீட்டி பணம் பெற்ற அரசியல்வாதிகள், அதிகாரிகள், அதிலும் கடைசியில் பாலத்தின் தரத்திற்கு சான்றிதழ் கொடுத்த அதிகாரி என அனைவரும் கைது செய்யப்பட்டு செலவழிக்கப்பட்ட பணம் அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும்.

 இந்த நடவடிக்கையை முதல்வர் கறாராக எடுக்க வேண்டும். நடவடிக்கைக்கு உள்ளாகும் அனைவரும் அவரது கட்சிக்காரர்களாகவே இருந்தாலும் கூட.

 

No comments:

Post a Comment