போராட்டப்பாதையில் சென்றால் இடதுசாரிகளை போல அழிவீர்கள் என்று காவித் தரகர் சுமந்து சொன்னதை வைத்து சில நாட்கள் முன்பாக ஒரு பதிவு எழுதியிருந்தேன்.
போராட்டத்தில் உண்மையாக இருந்தால் மக்கள் அப்போராட்டத்தை நடத்துபவர்களை ஆதரிப்பார்கள் என்பதற்கு வரலாறு முழுதிலும் உதாரணங்கள் உண்டு.
ஒரு
புதிய உதாரணம் நேற்று படைக்கப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வேயில் சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் இம்மாத துவக்கத்தில் நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
சி.ஐ.டி.யு சங்கத்தோடு இணைக்கப்பட்ட DREU சங்கம் 26,151 வாக்குகள் பெற்று அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
முதலிடம்
பெற்ற SRMU சங்கத்திற்கும் இரண்டாம் இடம் பெற்ற DREU சங்கத்திற்கும் வாக்கு வித்தியாசம்
107 மட்டுமே.
No comments:
Post a Comment