இன்று
மக்களவையில் தள்ளு முள்ளு நடந்துள்ளது.
ராகுல்
காந்தி ஒரு காங்கிரஸ் எம்.பி யை தன் மேல் தள்ளி விட்டதால் கீழே விழுந்து மண்டை உடைந்துள்ளதாக
ஒரு பாஜக எம்.பி ஐ.சி.யுவில் படுத்துக் கொண்டுள்ளதாக மத்யமர் ஆட்டுக்காரன் குழுவே அல்லோகலப்பட்டுக்
கொண்டிருக்கிறது.
முதல்
தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அநேகமாக ராகுல் காந்தியை கைது செய்யலாம். அதை
வைத்து எம்.பி பதவியிலிருந்து நீக்கும் முயற்சியைக் கூட மோடி செய்யலாம்.
யாரந்த
எம்.பி என்று பார்த்தால் அது சைக்கிள் சாரங்கியாம்.
யார்
அந்த சைக்கிள் சாரங்கி?
ஐந்து
வருடத்திற்கு முன்பு எழுதிய பதிவு கீழே . . .
மோடி சைக்கிளில் மறைத்த ரத்தக்கறை
மூங்கில் குடிசையில் வசிக்கும் ஏழை,
சைக்கிளில் மட்டுமே பயணிக்கும் எளிய வேட்பாளர்,
ஒடிஷாவின் மோடி
இப்படியெல்லாம் காவிகளால் சமூக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி.
ஒரு சாதாரண கதர் ஜிப்பா அணிந்த இந்த தாடி வைத்த மனிதர் நேற்று மோடியின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ஒரு எளிய மனிதரை அமைச்சராக்கி அழகு பார்த்துள்ளார் மோடி என்று சங்கிகளின் பெருமிதத்திற்கு அளவே இல்லை.
ஆனால் அந்த எளிமைக்குப் பின்னே ஒளிந்திருப்பது மோசமான ஒரு மனிதர், மத வெறி பிடித்த ஒரு மிருகம் என்பதை பி.பி.சி அம்பலப்படுத்தி உள்ளது.
கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் நினைவில் உள்ளாரா?
அவரும் அவரது இரண்டு மகன்களும் எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நினைவில் உள்ளதா? பஜ்ரங் தள் என்ற ஆர்.எஸ்.எஸ் ஸின் அடியாள் பிரிவுதான் அந்த அராஜகக் கொலைகளை நிகழ்த்தியது என்பதும் நினைவில் உள்ளதா?
இந்தியாவை உலக அரங்கில் தலை குனிய வைத்த அந்த கொடூரக் கொலையை நிகழ்த்திய பஜ்ரங் தள் அமைப்பின் அன்றைய ஒரிஸா மாநிலத் தலைவராகவும் நேரடியாக அக்கொலையைச் செய்த தாராசிங்கின் வழிகாட்டியுமாக இருந்ததும் யார் தெரியுமா?
இதோ இப்போது
சைக்கிளில் பயணிக்கும் எளியவராகச் சொல்லப்படுகிற
மோடியின் புதிய மந்திரி
பிரதாப் சந்திர சாரங்கிதான்.
அந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டதால் தலை மறைவாக இருந்தவர் அவர்.
அது மட்டுமல்ல, 2001 ல் ஒடிஷா மாநில சட்டப் பேரவையை தாக்கிய கலவர வழக்கிலும் பிரதான குற்றவாளி இந்த மனிதர்தான்.
சமூக ஊடகங்களால் ஒரு குற்றவாளியை ஒரு குற்றவாளியை புனிதன் போல சித்தரிக்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் இந்த சாரங்கி.
வெடிகுண்டு சாமியாருக்கு மந்திரி பதவி கொடுக்கவில்லை என்று காலையில் மோடிக்கு நன்றி சொல்லியிருந்தேன். இப்போதுதான் தெரிகிறது சீனியாரிட்டி அடிப்படையில் சாமியாருக்குப் பதிலாக சாரங்கிக்கு கொடுத்திருக்கிறார் என்று.
ஆக
மிகப் பெரிய கிரிமினல் மூலம் மோடியின் புது நாடகம் அரங்கேறியுள்ளது. அண்ணல் அம்பேத்கரை
இழிவு படுத்திய அமித்ஷாவை பாதுகாக்க நடத்திய திசை திருப்பும் நாடகம். அமித்ஷாவை பாதுகாப்பது
மோடியின் கடமை அல்லவா! மோடிக்காக இளம் பெண் பொறியாளரை உளவு பார்த்த உத்தமனல்லவா!
பிகு:
ஆமாம், எந்த மருத்துவமனையில் ஐ.சி.யு வில் ஒரு நோயாளியை எந்த மானிட்டர் இணைப்போ, குளுக்கோஸ்
கூட ஏற்றாமல், தொலைக்காட்சி கேமராக்கள் புடை சூழ மந்திரிகள் வருவதை அனுமதிக்கிறார்கள்.
போடும் நாடகத்தையாவது ஒழுங்கா போடுங்கடா . . .
No comments:
Post a Comment