உலகெங்கும்
இந்திய இசையின் அடையாளமாக திகழ்ந்த தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் உசேன் காலமாகி விட்டார்.
தாஜ்
மஹால் டீ விளம்பரத்தில்தான் அவரை முதன் முதலில் பார்த்துள்ளேன். அதி வேகமாய் நடனமாடும்
விரல்களும் னெற்றியில் அலைபாயும் தலைமுடியும் புன்னகைத்த முகமுமாய் உள்ளத்தை கவர்ந்தவர். வாஹ்!தாஜ் என்ற அந்த விளம்பரத்தை
யாரால் மறக்க முடியும்.
எப்போதும்
சோம்பி வழியும் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளில் விறுவிறுப்பான நிகழ்வாக அவரது தபேலா நாதம்
ஒலிக்கும்.
ஒரே
ஒரு முறைதான் அவரது நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அது
திருவையாறு தியாகராஜ உத்சவம். மாண்டலின் ஸ்ரீனிவாஸின் கச்சேரி அது.
அந்த
நிகழ்ச்சியில் தபேலாவில் ஜாகீர் உசேனும் தவிலில் ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேலுவும்
நடத்திய தனி ஆவர்த்தனம் காலம் முழுதும் நெஞ்சில் நிலைக்கும்.
அதன் இரு காணொளிகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
ஒரு
குழந்தை தன் தந்தையின் தலையில் தபேலா வாசிக்கும். அதுதான் ஜாகீர் உசேன் ஏற்படுத்திய
தாக்கம்.
அவருடைய
அப்பா உஸ்தாத் அல்லாரக்கா, பண்டிட் ரவிசங்கருக்கு தபேலா வாசிப்பவர். ஜாகீர் உசேனும்
அவருக்கு வாசித்துள்ளார்,
தந்தையை
மிஞ்சிய தனயானாக, சர்வதேச அளவில் முத்திரை பதித்தவர் ஜாகீர் உசேன். தபேலா என்றால் முதலில்
நினைவுக்கு வருபவரும் அவர்தான்.
அவருக்கு
மனமார்ந்த அஞ்சலி.
இசை மேதைக்கு இதய பூர்வமான அஞ்சலி
ReplyDelete