வாரணாசி
ஞானவாபி மசூதிக்குள் கோயில் ஒளிந்து உள்ளது,
ஆய்வு நடத்த வேண்டும் என்று விஷ்ணு சர்மா என்ற ஒருவர் வழக்கு தொடுக்க, பணி ஓய்வுக்குப்
பிந்தைய பணிக்காக காத்திருந்த மாவட்ட நீதிபதி ஒருவர் “அப்படியே ஆகட்டும்” என்று தீர்ப்பு எழுதி ஓய்வு பெற்ற மறுநாளே புதிய பதவியில்
போய் ஒட்டிக் கொண்டா.
அதே
உ.பி யில் சம்பல் என்ற நகரத்தில் அதே நபர் அங்கேயுள்ள 700 ஆண்டு பழமையான மசூதிக்குக்
கீழே கோயில் உள்ளது என்று வழக்கு தொடுக்க அங்கேயும் ஒரு நீதிபதி “ஆஹா, அவர் சொன்னபடியே செய்து விடுங்கள்” என்று
ஆணையிட அதன் பின் நடந்த நிகழ்வுகள், எதிர்ப்புக்கள், போலீஸ் துப்பாக்கிச் சூடு என நான்கு
இஸ்லாமிய வாலிபர்கள் உயிரிழந்தனர்.
இப்போது
அதே விஷ்ணு சர்மா இன்னொரு வழக்கை தொடுத்துள்ளார்.
மன நிலை பாதிக்கப்பட்டவரிடம் சிக்கிக் கொள்கிற வடிவேலு, “இதே வேலையாதான் அலையறானா?”
என்பதைப் போல இதே வேலையாகத்தான் அந்த மனிதன்
செயல்படுகிறான் அல்லது செயல்பட வைக்கிறார்கள்.
இந்தியாவில்
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனிதத்தலம் ஆஜ்மீர் தர்கா. க்வாஜா மொய்னுதீன் ஹசன்
சிஸ்டி என்ற இஸ்லாமிய குருவை கடக்கம் செய்த இடம் இது. கிட்டத்தட்ட எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட
தர்கா அது.
அன்றைய
அரசர்கள் தொடங்கி இன்றைய அமைச்சர்கள் வரை இந்த தர்காவிற்கு வந்து காணிக்கை செய்யாத
தலைவர்கள் கிடையாது. இதனை விரிவு படுத்த நிதியளித்தது பரோடாவின் மன்னர், இவர் ஒரு இந்து.
ரா.கி.ரங்கராஜன்
எழுதிய வாளின் முத்தம் (என்றுதான் நினைக்கிறேன்) நாவலில் க்வாஜா மொய்னுதீன் ஹசன் சிஸ்டியின்
பெருமைகளை நன்றாக விவரித்திருப்பார்.
பெனாசிர்
பூட்டோ, நவாஸ் ஷெரீப், ஜெனரல் முஷரப் போன்ற பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல பாரக்
ஒபாமா கூட வந்துள்ளார். ஏன் இஸ்லாமிய வெறுப்பின் அடையாளமான மோடி கூட இங்கே வந்து காணிக்கை
செலுத்தி விட்டு சென்றுள்ளார்.
ஆஜ்மீர்
தர்காவை வைத்து அரசியல் செய்வது, ஆய்வு, கீய்வு என்றெல்லாம் செல்வது போண்ற வேலைகளால்
இந்தியாவின் மானம் உலக அரங்கில் கப்பலேறும்.
டிசம்பர்
21 அன்று வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அந்த நீதிபதி என்ன செய்வார் என்று பார்ப்போம்.
முக்கியமான பின் குறிப்பு : இந்த பதிவை இன்றுதான் எழுத வேண்டும் என்று காத்திருந்தேன். இன்றைய நாள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள். ஆனால் டிசம்பர் ஆறு என்றால் மக்கள் மனதில் முதலில் நினைவுக்கு வருவது பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாள் என்பதுதான். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை பின்னுக்குத் தள்ளவே சங்கிகள் மசூதியை இடிக்க இந்நாளை தீர்மானித்தார்கள். ஒரு மசூதியை இடிக்கத் துணிந்தவர்கள் மற்ற மசூதிகளையும் இடிக்கத்தான் விரும்புவார்கள். அதுதான் அவர்களின் அரசியல். இந்தியாவின் மானம் கப்பலேறுவதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
No comments:
Post a Comment