தலைமை
நீதிபதி உள்ளிட்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச், நேற்று ஒரு முக்கியமான ஆணையை கீழமை நீதிமன்றங்களுக்கு
பிறப்பித்துள்ளது.
“அயோத்தி பாபர் மசூதி இடத்தைத் தவிர வேறெந்த
வழிபாட்டுத் தலங்களும் 15.08.1947 அன்று என்ன நிலைமை இருந்ததோ அதே நிலையில் தொடரும்
என்று சொல்கிற வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு 1991 சட்டம் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு
சொல்கிறவரை
எந்த கீழமை நீதிமன்றமும் ஒரு மதத்தின் வழிபாட்டுத்தலங்களை
ஆய்வு செய்ய வேண்டும் என்று மாற்று மதத்தவர் தாக்கல் செய்கிற எந்த ஒரு வழக்கையும் பதிவு
செய்யக்கூடாது, தீர்ப்பு அளிக்கக் கூடாது”
இதுதான்
அந்த ஆணையின் சாராம்சம்.
பணி
ஓய்வுக்கு முன்பாக பாஜகவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி பணி ஓய்வுக்கு பிந்தைய பதவியை
தட்டித் தூக்க காத்திருந்த நீதிபதிகள் அனைவருக்கும் இந்த ஆணை இடியாய் இறங்கியுள்ளது.
வேறு
வேலை எதுவுமில்லாத விஷ்ணு சர்மா போன்ற ஆட்களின்
பிழைப்பும் இந்த ஆணையால் பாதிக்கப்படும்.
எல்லாம்
சரி,
வேறு
ஒரு அச்சம் இருக்கிறது.
வழிபாட்டு
தலங்கள் 1991 சட்டடம் தொடர்பான வழக்கில்
ஜட்ஜய்யா என்ன தீர்ப்பு எழுதுவாரோ என்ற அச்சம்தான்
அது.
முன்னாள்
தலைமை நீதிபதியாரைப் போல கடவுளைக் கேட்டு தீர்ப்பு எழுதாமல் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தீர்ப்பு அமைய வேண்டும் என்பதும் தீர்ப்பு ஆளுனர் பதவிக்கான
நுழைவுத் தேர்வாக அமையக் கூடாது என்பதும் நம் எதிர்பார்ப்பு.
பார்ப்போம்
என்ன நடக்கிறது என்று . . .
No comments:
Post a Comment