Tuesday, December 21, 2021

விஷத்தை விதைத்தால் கலவரம்தானே விளையும்?

 


கர்னாடக மாநிலத்தில் மகாராஷ்டிர மாநில எல்லைப் பகுதி நகரம் இப்போது  பெல்காவி என்றழைக்கப்படுகிற பெல்காம். அந்த நகரம் மஹாராஷ்டிராவுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற பஞ்சாயத்து பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அந்த பஞ்சாயத்தின் ஒரு பகுதியாக கர்னாடகக் கொடியை மஹாரஷ்டிராவில் எரிக்க, அதற்கு எதிர்வினையாக பெங்களூரில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலையை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். மஹாராஷ்டிரா கோஷ்டி சும்மா இருக்குமா?

பெல்காவியில் உள்ள சங்கொளி ராயண்ணா என்ற விடுதலைப் போராட்ட வீரரின் சிலையை சேதப்படுத்தி உள்ளார்கள்.அதன் விளைவு கலவரம், ஊரங்கு உத்தரவு, 27 பேர் கைது.

மூன்று நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அமைதி திரும்பவில்லை.

இந்த நிலைமைக்கு யார் காரணம்?

குறுகிய சிந்தனையோடு பிரிவினை வெறியை தூண்டுவது, முக்கியத் தலைவர்களை, ஆளுமைகளை தன் மாநிலம், தன் ஜாதி என்று சின்ன சிமிழுக்குள் அடைப்பது. அப்படி குறுகிய வட்டத்திற்குள் தலைவர்கள் சிறைபடும் போது அடுத்த தரப்பு  அவரை எதிரியாகத்தான் பார்க்கும்.

ஜாதி/மத/பிராந்திய வெறி என்பது பற்றி எரிய காத்திருக்கும் தீ . . .

பற்ற வைத்து விட்டால் அவ்வளவு எளிதில் அணையாது.

அதனால்தான் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் சத்ரபதி சிவாஜி சிலையும் சங்கொளி ராயண்ணா சிலையும் சேதப்படுத்தப்படுத்தப் படுகிறது.

இந்த பிரச்சினையில் ஒரே ஒரு ஆறுதல் உண்டு.

மோதிக் கொண்ட இரு தரப்பும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள்.

அப்படி இல்லையென்றால்  . . . . . .

சிந்தித்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

No comments:

Post a Comment