Sunday, December 26, 2021

பத்து லட்ச ரூபாய் கேட்டவுடன் . . .

 


ஒரே டெக்னிக்கை வைத்து எத்தனை நாள் மோசடி செய்வார்கள் என்று தெரியவில்லை.

தஞ்சைக் கோட்டப் பொதுச்செயலாளர் தோழர் சேதுராமனிடமிருந்து முக நூல் நட்பழைப்பு வந்ததுமே இது மோசடி அழைப்பு என்று தெரிந்து விட்டது. இது போன்ற மோசடிப் பேர்வழிகளை வெறுப்பேற்ற வேண்டும் என்று நட்பழைப்பை ஏற்றேன்.

எதிர்பார்த்தது போல அடுத்த நிமிடமே இன்பாக்ஸில் செய்தி வந்து விட்டது. 

அவன் பணம் கேட்பதற்கு முன்பாக நான் 

"உன்னிடம் ஜிபே உள்ளதா? பத்து லட்சம் ரூபாய் பணம் வேண்டும், அனுப்புவாயா?"

என்றெல்லாம் கேட்டதும் ப்ளாக் செய்து விட்டான்.

மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்றுதான்.

இன்பாக்ஸிலோ அல்லது மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலமாக யார் பணம் கேட்டாலும் அனுப்பாதீர்கள். நேரடியாக தொலைபேசி செய்து உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

இன்னொன்றும் சொல்கிறேன்.

என்னிடமிருந்து மேற்கண்ட முறைகளில் பணம் கேட்டு வந்தால் அது நிச்சயமாக நான் கேட்டது அல்ல மோசடிதான். 

1 comment:

  1. Hi can you send me 10000 dollars.once modi deposits my 15 lakh, I will pay you back.

    ReplyDelete