Monday, July 21, 2014

நல்ல வேளை, இந்த கண்றாவியைப் பார்க்க அவர்கள் உயிரோடு இல்லை!



 photo Thiruvilayadal0006.jpg

ஞாயிற்றுக் கிழமையன்று  “வேலையில்லா பட்டதாரி” படம் பார்க்க சென்றிருந்தோம். அதன் விமர்சனம் நாளை எழுதுகின்றேன்.

திரைப்படத்திற்கு முன்பாக ஒரு விளம்பரப் படம். ஜெ வின் மூன்றாண்டு கால சாதனையைப் பாராட்டி மனோபாலா, சின்னி ஜெயந்த் ஆகியோரை வைத்து எடுத்துள்ளார்கள்.

திருவிளையாடல் தருமி காட்சியை அடிப்படையாகக் கொண்டு எடுத்த விளம்பரப் படம். நாகேஷாக மனோ பாலாவும் நக்கீரனாக சின்னி ஜெயந்தும். சிவாஜியிடம் நாகேஷ் கேள்வி கேட்பதையும் நக்கீரனிடமே கேட்பதாக மாற்றியிருந்தார்கள்.

தமிழக திரை வரலாற்றில் ஒரு முக்கியமான காட்சியை கொலை செய்து ஜெயலலிதா புகழ்பாட எப்படித்தான் மனது வந்ததோ? கொஞ்சம் மனசாட்சி இருந்ததால் சிவாஜி கேரக்டரை விட்டு விட்டார்கள் போல.

நல்ல வேளை இந்த கண்றாவிக் காட்சியைப் பார்க்க ஏ.பி.நாகராஜன், சிவாஜி கணேசன், நாகேஷ் உயிரோடு இல்லை.

4 comments:

  1. அம்மாவோட கம்யூனிஸ்ட்கள் கூட்டணில இருந்து இருந்தா தருமி மனோபாலா வேஷத்துக்கு தோழர் தா.பாண்டியனை போட்டிருக்கலாம். அம்சமா இருந்திருக்கும். வட போச்சா...

    ReplyDelete
    Replies
    1. விவரம் தெரியாம பேசாதே அனானி. அவுக வடகலை. இவுக தெக்கலை. இதுகூட தெரியாம பேசி உருவாக்கதே இன்னொரு சிக்கலை...

      Delete
  2. கொஞ்சம் புரியற மாதிரி எப்பதான் எழுதப் போறீங்க அன்பே சிவம் ஐயா அவர்களே?

    ReplyDelete
  3. திரு சிவஜோதி ஐயா, உங்கள் பின்னூட்டத்தை மீண்டும் படித்த போது உங்கள் குதர்க்கம் புரிந்தது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளை வலது இடது என்று சொல்வார்கள். வட கலை, தென் கலை என்பது ஐயங்கார் ஜாதியின் இரு பிரிவுகள். இடதிற்கும் தென் கலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? கம்யூனிஸ்டுகள் மீது உங்களுக்கு ஏதோ ஆதங்கம் இருக்கிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படியல்ல நானும் ஒரு சராசரி கம்யூனிச எதிர்ப்பாளன் என்பதை காண்பித்துக் கொண்டு விட்டீர்கள். வருத்தமாக உள்ளது. ஜாதிகளை கடந்த கம்யூனிஸ்டுகளை அதன் பெயரில் குறிப்பிடும் உங்கள் சிந்தனை சகிக்கல.

    ReplyDelete