Tuesday, July 22, 2014

வஞ்சிக்கப்பட்ட வெங்சர்க்கரை நினைவில் உள்ளதா?




இந்திய கிரிக்கெட் ரசிகர்களைப் போல கன்ஸிஸ்டன்ஸி இல்லாத ஆட்கள் உலகிலேயே கிடையாது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் தலையில் வைத்து கூத்தாடுவதும், அடுத்த போட்டியில் தோற்றால் காலில் போட்டு மிதிப்பதும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் குணாம்சம். இப்போது கூத்தாடுகிறார்கள். நாளை?

லார்ட்ஸ் மைதான வெற்றி பற்றி நிறைய எழுதியுள்ளார்கள். இதற்கு முன்பான லார்ட்ஸ் மைதான வெற்றிக்குக் காரணமான திலிப் வெங்க்சர்கர் பற்றி ஓரிருவரே நினைவு கொண்டிருந்தார்கள். சொந்த சாதனைகளுக்காக கவாஸ்கர் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் அணிக்காக விளையாடியவர். நளினமான ஷாட்டுகளுக்கு சொந்தக்காரர்.  லாபியிங் செய்யத் தெரியாமால் கிரிக்கெட் வாரிய அரசியலில் பலியானவர்.

அவரை அணியிலிருந்து அராஜகமாக நீக்கிய போது ஹிந்து நாளிதழில்
Poor Guy, Should have Got himself sponsored by Snamprogetti
என்று போட்டிருந்த கார்ட்டூன்தான் எனக்கு நினைவுக்கு வந்தது.

பின் குறிப்பு : Snamprogetti  போபோர்ஸ் ஊழலில் தொடர்புடைய இத்தாலி நாட்டு தரகர் ஓட்டோவியா குவாட்ரேஷி  யின் நிறுவனம்.

1 comment:

  1. மிகச்சிறந்த ஆட்டக்காரர்! அணியில் இவருக்கு சப்போர்ட் இல்லாததால் பந்தாடப்பட்டு பலியானவர். தொடர்ந்து விளையாடி இருந்தால் கவாஸ்கரின் சாதனையை முறியடித்து இருப்பார்.

    ReplyDelete